தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  5 Habbits Women Should Avoid For Skin Glow

Beauty Tip: சருமம் பளபளப்பாக இருக்க பெண்கள் தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்கள்

I Jayachandran HT Tamil
May 06, 2023 03:27 PM IST

சருமம் பளபளப்பாக இருக்க பெண்கள் தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

பளபளப்பான சருமம்
பளபளப்பான சருமம்

ட்ரெண்டிங் செய்திகள்

சருமத்தைப் பாதுகாக்க உள்ள வழிகள்-

புகைப்பதை கைவிடுவது

புகைக்கும் பழக்கம் பெண்களுக்கு கூடாது என நாங்கள் அறிவுறுத்த வரவில்லை. ஆனால், இது உங்கள் உடல்நலனை பாதிப்பதோடு, உங்கள் சருமம் மற்றும் கூந்தலையும் பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகைப்பது, உங்கள் சருமத்தை மங்கலாக்கி, பிக்மெண்டேஷனை அதிகமாக்கி, உதடுகளை கருப்பாக மாற்றுகிறது. விரைவில் கைவிடுவது மிகவும் நல்லது.

தினமும் இரு வேளை முகம் கழுவுவது

தினமும் இரண்டு வேளை முகம் கழுவும் வழக்கம் உங்களுக்கு இல்லை எனில், உடனே அதை துவக்குவது நல்லது. மாசு, பருவநிலை ஆகியவை காரணமாக சருமம் மீது புழுதி படிந்து உங்கள் முகத்தையும் பாதிக்கிறது. இவற்றை சுத்தம் செய்யாவிட்டால், கிருமிகள் பாதிப்பு மற்றும் பிரேக் அவுட் உண்டாகலாம். எனவே காலை மற்றும் இரவில் உங்கள் முகத்தை கழுவ மறக்க வேண்டாம். மேலும் உங்கள் சருமத்தை மாசுகளில் இருந்து காக்கக் கூடிய நல்ல பேஷ்வாஷை பயன்படுத்த மறக்க வேண்டாம். பாண்ட்ஸ் பியூர் ஒயிட் ஆன்டி பொல்யூஷன் வித் ஆக்டிவேட்டர் சார்கோல் பேச்வாஷை பயன்படுத்தலாம்.

வெந்நீர் குளியல் சருமத்துக்கு தீங்கு

வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கலாம் ஆனால், வெந்நீர் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை பாதிக்க கூடியது. இது உங்கள் சருமத்தை உலர் தன்மை கொள்ளச்செய்து, நீர்த்தன்மையை பாதிக்கிறது. இதற்கு மாறாக வெதுவெதுப்பான தண்ணீரில் விரைவாக குளிக்கவும்.

சோடாவை குறையுங்கள்

நாவுக்கு சுவையாக இருப்பது உங்கள் உடல் நலத்துக்கும் ஏற்றது என கூற முடியாது. சோடா பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் சமருத்தின் நீர்த்தன்மையை பாதித்து, முன்கூட்டியே வயோதிக்கத்தை அதிகமாக்குகிறது. அதோடு, சருமத்தின் மீதான சோடா பயன்பாட்டின் தாக்கம் புகைப்பதால் உண்டாகும் பாதிப்புக்கு நிகரானது.

நல்ல தூக்கம் முக்கியம்

நல்ல தூக்கத்தின் முக்கியத்துவத்தை எவ்வளவு வேண்டுமானாலும் வலியுறுத்தலாம். எந்த சூழலிலும் தினமும் 8 மணி நேரம் தூங்குவது எனும் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள். நல்ல தூக்கம் இல்லாதது உங்கள் சரும நலனை பாதிப்பதோடு, கரு வளையங்கள் தோன்றச்செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்