தமிழ் செய்திகள்  /  latest news  /  வழக்கம் போல் காதலர்தினம் கொண்டாடப்படும்! மத்திய அரசால் தடுக்க முடியது! சேகர்பாபு

வழக்கம் போல் காதலர்தினம் கொண்டாடப்படும்! மத்திய அரசால் தடுக்க முடியது! சேகர்பாபு

Kathiravan V HT Tamil
Feb 10, 2023 02:03 PM IST

காதலர் தினம் அனைவரும் நேசித்து வரம்பிற்கு உட்பட்டு கொண்டாடப்படும்

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

ட்ரெண்டிங் செய்திகள்

காலை 10.12 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியோர் முன்னிலையில் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு 460 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. சுந்தராஜ பெருமாள் கோயில் திருப்பணியை மேற்கொண்ட அண்ணன் வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கரன் கோயிலில் உள்ள குளம், திருத்தேர், தெப்பக்குளம் ஆகியவற்றை ஆய்வு செய்தேன். சங்கரநாராயணர் கோயில் முழுவதையும் 7.5 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை மேற்கொண்டு 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் அக்கோயிலின் 1000ஆம் ஆண்டு விழாவை கொண்டாடவும் திட்டமிட்டுள்ளோம். 

கோயிலில் யானைகளை வழங்குவதை பொறுத்தவரை வனத்துறை சட்டப்படி நேரடியாக யானைகளை பெற முடியாது என்ற நிலை உள்ளது. யாராவது வளர்த்துக் கொண்டு இருக்கிறவர்கள் கோயிலுக்கு வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வோம் என்றார்.

காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை பசுக்களை அரவணைக்கும் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, காதலர் தினம் கொண்டாடுபவர்களை இதுபோன்ற உத்தரவுகளால் தடுக்க முடியாது, ஆகவே காதலர் தினம் அனைவரும் நேசித்து வரம்பிற்கு உட்பட்டு கொண்டாடப்படும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்