என்னை யூஸ் பண்ணிகிட்டாங்க! நான் தான் செலவு பண்ணுனேன்.. பேசகூட மாட்டிங்கிறாங்க.. பொங்கிய வீரன்..
மஞ்சள் வீரன் படத்திலிருந்து தன்னை நீக்கியது குறித்து யூடியூபர் டிடிஎஃப் வாசன் சுமார் ஒருவாரத்திற்கு பின் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதிவேகமாக பைக் ஓட்டி, அதனை யூடியூபில் பதிவேற்றி வந்தவர் டிடிஎஃப் வாசன். தன்னுடைய செயல்களால், பேச்சாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர், தற்போது அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மனமுடைந்த டிடிஎஃப் வாசன்
அந்த வீடியோவில், மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை நீக்கியது குறித்து பேசியுள்ளார், அதில், இந்தப் படத்திற்காக நான் பல செலவு செய்துள்ளேன். அண்ணா அண்ணா எனக் கூறி வைத்து செய்துவிட்டனர். நான் சூட்டிங்கிற்கு ஒத்துழைக்கலில்லை என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குந்ர் செல் அம் கூறியுள்ளார். ஆனால், இதுவரை மஞ்சள் வீரன் படத்திற்கான போட்டோ சூட் மட்டுமே நடந்துள்ளது. இதுகுறித்து பேச இயக்குநர் செல் அத்தை தொடர்பு கொள்ள முடியில்லை எனக் கூறியுள்ளார்.
அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்த வீடியோக்களின் மூலம் இளைஞர்களிடம் பரிட்சையமானவர் டிடிஎஃப் வாசன். 2கே கிட்ஸின் நாயகனாக இவர், மஞ்சள் வீரன் என்ற படத்திலும் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகி இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் தொடங்கியிருந்தார்.