தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ttf Vasan Shares Pics With Actress Shaalin Zoya In His Insta Page

TTF Vasan: பிரபல நடிகையுடன் கேஷுவல் கிளிக்! ஹார்ட் எமோஜி ரியாக்‌ஷன் - வைரல் மோடில் டிடிஎஃப் வாசன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 06, 2024 05:05 PM IST

பிரபல நடிகையுடன் கேஷுவலாக புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் டிடிஎஃப் வாசன் தற்போது வைரல் மோடுக்கு மாறியுள்ளார்.

மலையாள நடிகை ஷாலின் ஜோயாவுடன் டிடிஎஃப் வாசன்
மலையாள நடிகை ஷாலின் ஜோயாவுடன் டிடிஎஃப் வாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

டிடிஎஃப் வாசன் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து பிரபல நடிகையான ஷாலின் ஜோயா என்பவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் டிடிஎஃப் வாசன், அதில் ஹாய் கத்திஜா என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நடிகை ஷாலின் ஜோயா, ஹார்ட் எமோஜியுடன் ரியாக்ட் செய்துள்ளார்.

மலையாள படங்களில் நடித்து வரும் நடிகையான ஷாலின் ஜோயா, தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதைடுத்து டிடிஎஃப் வாசன், நடிகை ஷாலின் ஜோயா ஆகியோர் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்படும் நிலையில், இவர் தான் மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோயினாக இருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

கதிஜா என வாசன் குறிப்பிட்டிருப்பதால், படத்தில் அவரது கதாபாத்திரம் பெயராக கூட இருக்கலாம் எனவும் தெரிகிறது. அதேசமயம் வாசன் பகிந்திருப்பது நடிகையுடன் கேஷுவலாக இருக்கும் புகைப்படமாக இருப்பதால் ஷாலின் ஜோயா படத்தின் ஹீரோயினா அல்லது காதலியா என்பது விரைவில் தெரியவரும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.