வாடகை தரவில்லை..அடியாள்களை வைத்து மிரட்டல்! இசையமைப்பாளர் தேவா மகள் மீது குற்றச்சாட்டு வைத்த பெண் - என்ன நடந்தது?
வாடகை தரவில்லை எனக்கூறி வீட்டில் வசித்த பெண்ணை அடியாள்களை வைத்து மிரட்டுவதாக இசையமைப்பாளர் தேவாவின் மகள் மீது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எழுத்து பூர்வமாக புகார் எதுவும் அளிக்கவில்லை

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் தேனிசை தென்றல் தேவா. தற்போது அதிகமாக இவர் படங்களில் இசையமைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இசை கச்சேரி நடத்தி வருவதுடன், சினிமாக்களில் பாடல் பாடியும் வருகிறார். தேவாவுக்கு ஸ்ரீகாந்த் தேவா என்ற மகனும், ஜெயப்பிரதா என்ற மகளும் உள்ளார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.
தேவா மகள் ஜெயப்பிரதா மீது குற்றச்சாட்டு
சென்னை வடபழனியில் இசையமைப்பாளர் தேவா மகள் ஜெயபிரதாவுக்குச் சொந்தமா வீடு ஒன்று உள்ளது. இவரது வீட்டை தீபிகா, ஜெயக்குமார் தம்பதிகள் வாடகைக்கு வசித்து வருகிறார்கள். விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தீபிகா கதறி அழுதபடி பகிர்ந்திருக்கும் விடியோவில், "எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காரணம் ஜெயபிரதா தான்" என்று கூறியுள்ளார்.
விடியோவில் அழுதவாறே பேசியிருக்கும் தீபிகா, "வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களை அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" என கூறியுள்ளார்.
