தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Viswasam Movie To Be Remake In Telugu

Viswasam Remake: தெலுங்கில் ரீமேக்காகும் விஸ்வாசம்… ஹீரோ யார் தெரியுமா?

Aarthi V HT Tamil
Jan 19, 2023 01:06 PM IST

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.

விஸ்வாசம் ரீமேக்
விஸ்வாசம் ரீமேக்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது, ​​மற்றொரு ரீமேக் படத்தை இயக்க சிரஞ்சீவி பச்சைக் கொடி காட்டியுள்ளார் என்ற செய்தி தற்போது படக்குழு வட்டாரங்களில் இருந்து லீக்காகி உள்ளது. 

சிரஞ்சீவி நடிப்பில் பொங்களுக்கு வெளியான திரைப்படம் வால்டர் வீரய்யா. இந்த படத்தில் சிரஞ்சீவி அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.  இந்த படத்தில் சிரஞ்சீவி இளமையாகவே காணப்படுகிறார். 

பாபி இயக்கிய இந்தப் படத்தில் ரவி தேஜாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூல் அமோகமாக உள்ளது. 

சிரஞ்சீவி கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘போலா சங்கர்’ படத்தை தொடங்கினார் என்பது தெரிந்ததே. தமிழில் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார். 30 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிரஞ்சீவி மீண்டும் கலந்து கொண்டார்.

இவர் தற்போது மேலும் சில திட்டங்களை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கனவே சில இளம் இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இந்நிலையில் தமிழில் சூப்பர் ஹிட்டான ‘விஸ்வாசம்’ படத்தை ரீமேக் செய்ய மெகா ஸ்டார் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார். இந்தப் பொறுப்புகளை அவர் மூத்த இயக்குநர் வி.வி.விநாயகிடம் ஒப்படைத்துள்ளார்.

 இந்த கதையில் இயக்குநர் மாற்றங்களை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இவர்களின் கூட்டணியில் 'தாகூர்' மற்றும் 'கைதி நம்பர் 150' ஆகிய படங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு இயக்குநர் சிறுத்தை சிவா எழுதி இயக்கிய படம் விஸ்வாசம். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் இசையமைப்பாளர் டி இமான் படத்தின் இசைக்காக தேசிய விருதை வென்றார். விஸ்வாசம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்தது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்