தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal: சாரி லோகேஷ்.. லியோ வாய்ப்பை உதறித்தள்ளியது ஏன்? - முதல் முறையாக பேசிய விஷால்

Vishal: சாரி லோகேஷ்.. லியோ வாய்ப்பை உதறித்தள்ளியது ஏன்? - முதல் முறையாக பேசிய விஷால்

Aarthi V HT Tamil
Sep 02, 2023 12:00 PM IST

லியோ படத்தில் எதனால் நடிக்கவில்லை என விஷால் பேசி உள்ளார்.

நடிகர் விஷால் -கோப்பு படம்
நடிகர் விஷால் -கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கேங்ஸ்டர் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் தளபதி விஜய்யுடன் சஞ்சய் தேத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இதில் துல்கர் சல்மான் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்ஜய் தத், பிரியா ஆனந்த், கௌதம்மேனன், அர்ஜுன், மைசூர் அலிகான், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் இருக்கக்கூடிய இந்த திரைப்படத்தை லலித் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்று உள்ளது. இந்தத்திரைப்படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே இப்படத்தில் அர்ஜூன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிப்பதாக இருந்தது. அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததாகவும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடியாது என கூறினார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தால் ஸ்பிலிட் பர்சனாலிட்டி ஆகிவிடுவேன் என்றார் விஷால்.

இதுகுறித்து விஷால் கூறுகையில், “நான்கு மாதங்கள் லியோவுக்கு ஒதுக்க லோகேஷ் என்னிடம் கேட்டார். என்னால் அது முடியாமல் போனது. அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். துப்பறிவாளன் 2 படத்தால் என்னால் அதை செய்ய முடியவில்லை. ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய விரும்பவில்லை " என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்