குளியலறை கேள்விகளை நிறுத்துங்கள்.. இனி எந்தப் பேட்டியும் கொடுக்க மாட்டேன்.. மும்பை பறந்த சுசித்ரா
பிரபல பாடகியான சுசித்ரா சினிமாத்துறையில் நடக்கும் பல விஷயங்களை பேசி பரபரப்பாக்கிய நிலையில், இனி எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டி தரமாட்டேன் என தீர்க்கமாக கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. சுமார் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், ரோடியோ துறையிலிருந்து தனது கெரியரை ஆரம்பித்தார். இதையடுத்து, நடிகர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் பாடகராக அறிமுகமானார். மனதை மயக்கும் இவரது குரலுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர்.
சர்ச்சை கருத்து
இந்நிலையில், தனது கணவர் கார்த்திக் உடன் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், சுசித்ரா கார்த்திக் குறித்தும் அவரது நண்பரான நடிகர் தனுஷ் குறித்தும் பல அவதூறான கருத்துகளை பொது வெளியில் கூறிவந்தார். இதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் நடத்தும் பார்ட்டிகள், அங்கு விநியோகிக்கப்படும் போதைப் பொருட்கள், நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை என தொடர்ந்து பல கருத்துகளை வெளியில் கூறிவந்தார்.
இதையடுத்து, பாடலாசிரியர் வைரமுத்து குறித்தும் பல சர்ச்சை கருத்துகளை கூறி வந்தார். பின் கணவரை விவாகர்தது செய்த நிலையில், இன்னும் தீவிரமாக தன் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்து பேசி வந்தார். இவரது பேட்டி வெளியானாலே சர்ச்சைகளும் வெளிவரும் என மக்கள் காத்திருக்கும் நிலையில், இனி பேட்டிகள் எதுவும் தரப்போவதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளார்.