தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalaivar 170: ஆன்மிகத்துக்கு ஆஃப்.. ஒர்க் மோடு ஆன்.. பகத்தை இழுத்து விட்ட நடிகர்..பரபரக்கும் தலைவர் 170!

Thalaivar 170: ஆன்மிகத்துக்கு ஆஃப்.. ஒர்க் மோடு ஆன்.. பகத்தை இழுத்து விட்ட நடிகர்..பரபரக்கும் தலைவர் 170!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 24, 2023 10:50 AM IST

‘தலைவர் 170’ படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தலைவர் 170
தலைவர் 170

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த  நிலையில், அதற்கான பணிகளையும் அவர் வேகமாக செய்து வந்தார். ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான் இந்தத்திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இந்தத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான அமிதாபச்சன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர்களுடன் மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் சர்வனாந்த் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அண்மையில் இந்தப்படத்தில் வில்லனாக நடிகர் பகத் பாசில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பான சுவாரஸ்சிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் இந்தப்படத்தில் பகத் பாசில் நடிக்க இருப்பதாக சொல்லப்படும் வில்லன் கதாபாத்திரத்திற்கு முதலாவதாக நடிகர் விக்ரமை அணுகியதாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் பகத் பாசிலை நடிக்க கேட்டதாகவும் திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் 3 வது வாரத்தில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக ஸ்டியோ ஒன்றில் பிரமாண்ட செட்கள் போடப்பட்டு இருக்கிறதாம். ’ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்துக்கும் அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. 

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்