Vijay Antony: ‘தமிழ் சினிமாவை கொல்லும் புளூ சட்டை’; வார்த்தையில் நெருப்பை கக்கிய விஜய் ஆண்டனி! - சம்பவம் என்ன தெரியுமா?
அவர்கள் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும்.

விஜய் ஆண்டனி!
இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியான திரைப்படம் ரோமியோ. இந்தப்படத்தில் மிர்ணாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். பரத் தனசேகர் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
