தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Thalapathy Vijay, Trisha's Blockbuster Film Ghilli To Re-release On April 20

Thalapathy Vijay: 20 வருட கொண்டாட்டம்.. ரீ ரிலிஸ் ஆகும் விஜயின் கில்லி.. ரிலிஸ் தேதி உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 03, 2024 02:20 PM IST

கடந்த 2004 ம் வெளியான கில்லி திரைப்படம் அந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில், அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. குறிப்பாக விஜயின் நடிப்பு, காமெடி டைமிங், நடனம் மற்றும் விறுவிறு திரைக்கதை உள்ளிட்டவற்றால் இந்தத்திரைப்படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

 கில்லி திரைப்படம் ரீ ரிலிஸ்!
கில்லி திரைப்படம் ரீ ரிலிஸ்! ( LetsCinema @letscinema)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தத்திரைப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் மெகா சூர்யா புரடொக்‌ஷன் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், “வருகிற ஏப்ரல் 20ம் தேதியோடு கில்லி திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆக உள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக அன்றைய தினம் இந்தத்திரைப்படம் ரீ ரிலிஸ் செய்யப்பட இருக்கிறது.” என்று பதிவிட்டு இருக்கிறது.

வருகிற ஏப்ரல் 19ம் தேதி நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் கில்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது. விஜயின் சமீபத்திய திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்து வரும் நிலையில், இந்தப்படத்திற்கும் பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஒக்கடு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 ம் வெளியான கில்லி திரைப்படம் அந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில், அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. குறிப்பாக விஜயின் நடிப்பு, காமெடி டைமிங், நடனம் மற்றும் விறுவிறு திரைக்கதை உள்ளிட்டவற்றால் இந்தத்திரைப்படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அப்போது வெறும் 8 கோடியில் உருவாக்கப்பட்ட இந்தத்திரைப்படம் 50 கோடி வரை வசூல் செய்தத்தாக தகவல்கள் சொல்லுகின்றன.

முன்னதாக, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப்படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. அதன் மூலம், நடிகர் விஜய் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியானது.

கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இருவரும் புதிய கீதை திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்தப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அப்டேட்டை நான் சொல்ல மாட்டேன். இந்த முறை நான் தெளிவாக இருக்கிறேன். பேச்சு இல்ல.... வீச்சுதான். நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று பேசினார். 

இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய கேமராமேன் சித்தார்த் நுனி கேமராமேனாக பணியாற்றுகிறார்.

முன்னதாக, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஜெமினி மேன் படத்தில் வில் ஸ்மித் மூன்று ரோலில் நடித்திருப்பார். அப்படியானால் விஜய்க்கு இந்த படத்தில் மூன்று ரோல் இருக்கலாம் எனவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள் எனவும் பேச்சு அடிபடுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்