தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijay Varasudu Is Heading Towards Failure In Telugu States

Varasudu: தெலுங்கில் கவிழ்ந்த வாரிசு: மாஸ்டர் வசூலை நெருங்க திணறல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 21, 2023 12:40 PM IST

தெலுங்கில் வாரிசு திரைப்படம் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

வாரசுடு தோல்வி
வாரசுடு தோல்வி

ட்ரெண்டிங் செய்திகள்

 

 

இது குறித்து பிரபல ஊடகம் வெளியிட்ட செய்தியின் படி, “ வாரிசு படத்திற்கு தமிழில் கிடைத்த வெற்றி தெலுங்கில் கிடைக்க வில்லை. வாரசுடு படத்தை திரையிடும் பெரும்பான்மையான திரையரங்குகள் காலியாகவே இருக்கின்றன. தெலுங்கில் வாரசுடு படமானது ரிலீஸூக்கு முன்னதாக 20 கோடிக்கு பேரம் பேசப்பட்டது. பின்னர் அந்த தொகை சிறிது குறைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வரை வாரசுடு திரைப்படம் தெலுங்கில் 12 கோடி ஷேரை மட்டுமே வசூலித்து இருக்கிறது. இந்த தொகையில் ஜிஎஸ்டி மற்றும் தமிழில் படம் பார்த்தவர்களின் வசூல் தொகையும் அடங்கும். 

 

ஆக தெலுங்கு பதிப்பின் வாரசுடு ஷேர் 10 கோடியாக இருக்கும் என தெரிகிறது. அதன்படி பார்க்கும் போது வாரசுடு படம் தெலுங்கில் தோல்வியை சந்தித்து இருக்கிறது; முன்னதாக தெலுங்கில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 15 கோடி வரை ஷேரை பெற்றது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது; ஆக, வாரசுடு படத்தின் வாயிலாக தெலுங்கில் விஜயின் மார்க்கெட் உயரவில்லை என்பது கண் கூடாக தெரிந்து விட்டது என்பது திரைவிமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்