Bigg Boss 8: சும்மா ஓட விடணும்... பர்ஃபெக்ட் ரெடி... ஊர்வலம் போன விஜய் சேதுபதி... அசத்தல் அப்டேட்
Bigg Boss 8: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் 8 தொடரின் புது ப்ரமோவை வெளியிட்டு, அதன் ஒளிபரப்பு நேரத்தையும் அறிவித்துள்ளது விஜய் டிவி. இதனை ரசிகர் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் டிவியில் வெளியாகி வந்த பிக்பாஸ் சீசனுக்கு புதிதாக அறிமுகமே தேவையில்லை. தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சி குறித்து தெரியாதவர்கள் என்றும் யாரும் இல்லை. நிகழ்ச்சியாக பார்க்காவிட்டால் கூட சின்ன சின்ன கிளிப்பிங்ஸாகவோ, மீம் கண்டென்டுகளாகவோ நிச்சயம் பிக்பாஸை அனைவரும் அறிந்திருப்பர்.
பிக்பாஸ் சீசன் 8
இந்த நிலையில், விஜய் டிவி பிக்பாஸ் 8வது சீசனுக்கான புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளது. இந்தப் ப்ரமோவிலும், விஜய் சேதுபதி நிகழ்ச்சியை எப்படி வழிநடத்த வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்கின்றனர். ஆனால் இந்தப் ப்ரமோவில் ஸ்பெஷலான விஷயமே இது எப்போது ஒளிபரப்பப்படும் என்ற அப்டேட் தான்.
இந்த ப்ரமோவில் அதற்கான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது என இந்தப் ப்ரமோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தான், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் நபர்கள் குறித்த அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும்.