Top Cinema News: விஜய் சேதுபதிக்கு அட்வைஸ், ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்..இன்றைய டாப் தமிழ் சினிமா செய்திகள்
Top Cinema News Today: விஜய் சேதுபதிக்கு அட்வைஸ், ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ், சிம்பு நிவாரண நிதி, பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு என இன்றைய டாப் தமிழ் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

தளபதி விஜய்யின் தி கோட் படம் நேர்மறையான விமர்சனங்களுடன் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று டாப் சினிமா செய்திகளை பற்றி பார்க்கலாம்.
உருவாகிறது 96 இரண்டாம் பாகம்
2018இல் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 96. விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார். இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடியே நடிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு
சென்னையில் குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கால்பந்து அகாடமியில் பயிற்சி முடித்து விட்டு இரவில் வீட்டுக்கு செல்லும்போது உணவு வாங்க செல்லும்போது இரு மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் மனோவின் மகன்கள் இருவரும் தாக்கியதாக சொல்லப்படுகிறது