Tamil Movies: ஷ்ரேயா கோஷல் பாடிய முதல் தமிழ் படம்..வரிசை கட்டிய ஃபீல் குட் காதல் படங்கள் - இன்று வெளியான தமிழ் படங்கள்
Tamil Movies On This Day: பாடகி ஷ்ரேயா கோஷல் பாடிய முதல் தமிழ் படம், ஒரே நாளில் வரிசை கட்டிய மூன்று ஃபீல் குட் காதல் படங்கள் என இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் அக்டோபர் 4ஆம் தேதியான இன்று டாப் ஹீரோக்களின் படங்கள், மாஸ் மசாலா படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், சில பீல் குட் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
1940 முதல் தற்போது வரை அக்டோபர் 4ஆம் தேதி வெளியான தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ
எங்கம்மா சபதம்
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஆர். முத்துராமன், சிவக்குமார், ஜெயச்சித்ரா, விதுபாலா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து 1974இல் வெளியான படம் எங்கம்மா சபதம். பேமிலி ட்ராமா பாணியில் அமைந்திருந்த படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
டாட்டா பிர்லா
பார்த்திபன், கவுண்டமணி, ரச்சனா பானர்ஜி, மணிவண்ணன் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க காமெடி படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் டாட்டா பிர்லா. படத்தின் டைட்டில் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் வி ஆர் நாட் டாட்டா பிர்லா என மாற்றப்பட்டது.
பார்த்திபன் - கவுண்டமணி காம்போ காமெடி ரசிக்க வைக்கும் விதமாக இருந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது.
யுனிவர்சிட்டி
ஜீவன், கஜாலா, ரகுவரன், விவேக் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ரெமாண்டிக் படமாக 2002இல் வெளியானது யுனிவர்சிட்டி. படத்தில் ஆல்தோட்ட பூபதி என்ற பெயரில் வரும் விவேக் காமெடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பிரகதீஷ் இயக்கியிருந்த இந்த படம் ஜீவன், கஜாலா ஆகியோரின் அறிமுக படங்களாக அமைந்தன.
வைரமுத்து பாடல் வரிகள் எழுத ரமேஷ் விநாயகம் இசையமைப்பில் ஜீவன் எங்கே, காதலை வளர்த்தாய், நெஞ்சே தள்ளிப்போ போன்ற பாடல்கள் எஃம்எம்களில் அதிக முறை ஒலித்த ஹிட் பாடல்களாக மாறின. பெரிய ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் பீல் குட் காதல் படமாக இருந்த யுனிவர்சிட்டி பட பாடல்கள் ஹிட்டானபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை ஈட்டவில்லை.
ஃபைவ் ஸ்டார்
இயக்குநர் மணிரத்னம் உதவியாளரான சுசி கணேசனின் அறிமுக படமான ஃபைவ் ஸ்டார் 2002இல் வெளியானது. பிரசன்னா, கனிகா ஆகியோர் அறிமுகமான இந்த படத்தில் கிருஷ்ணா, சந்தியா, மங்கை, கார்த்திக் போன்ற புதுமுகங்கள் நடித்தார்கள். கமிங் ஆஃப் ஏஜ், காதலி, பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருந்த படம் கவனத்தை ஈர்த்ததுடன், சராசரி வெற்றியையும் பெற்றது. ஸ்ரீராம் பரசுராம், அனுராதா ஸ்ரீராம் இசையில் திரு திருடா, ரயிலே ரயிலே போந்ற பாடல்கள் ஹிட்டாகின. இளைஞர்களை கவரும் விதமாக இருந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது
ஆல்பம்
இயக்குநர் ஜி. வசந்தபாலன் அறிமுகமான இந்த படம் 2002இல் வெளியானது. புதுமுகங்களான ஆர்யன் ராஜேஷ், ஸ்ருத்திகா நடித்திருக்கும் இந்த படத்தில் சரிதா, பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ரெமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெறவில்லை.
கார்த்திக் ராஜா இசையில் செல்லமே செல்லம் என்ற பாடல் சூப்பர் ஹிட் மெலடியாக மாறியது. பாடகி ஷ்ரேயா கோஷல் முதல் தமிழ் பாடலாகவும் இது அமைந்தது.
96
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்க பிரேம் குமார் இயக்கத்தில் 2018இல் வெளியான ரெமாண்டிக் படம் 96. இளைஞர்களை காதல் மழையில் நனைய வைத்த இந்த படம் சூப்பர் ஹிட்டானதுடன் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கோவிந்த் வசந்தா இசையில் அனைத்து பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. ராம் - ஜானு என்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்த படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்