Goundamani: எஸ். எஸ்.சந்திரன் அடித்த டயலாக்.. சண்டை போட்டு வெளியேற முடிவு செய்த கவுண்டமணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goundamani: எஸ். எஸ்.சந்திரன் அடித்த டயலாக்.. சண்டை போட்டு வெளியேற முடிவு செய்த கவுண்டமணி

Goundamani: எஸ். எஸ்.சந்திரன் அடித்த டயலாக்.. சண்டை போட்டு வெளியேற முடிவு செய்த கவுண்டமணி

Aarthi Balaji HT Tamil
Published Jul 07, 2024 10:19 AM IST

Goundamani: கவுண்டமணி, எஸ். எஸ்.சந்திரன் காமெடி சீன் போது உண்மையில் சண்டை போட்டு கொண்டதாக ராஜகோபால் பகிர்ந்திருக்கிறார்.

எஸ். எஸ்.சந்திரன் அடித்த டயலாக்.. சண்டை போட்டு வெளியேற முடிவு செய்த கவுண்டமணி
எஸ். எஸ்.சந்திரன் அடித்த டயலாக்.. சண்டை போட்டு வெளியேற முடிவு செய்த கவுண்டமணி

”என் கே விஸ்வநாதன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பெரிய மருது. இந்த படத்தில் விஜயகாந்த், கவுண்டமணி, ரஞ்சிதா, செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

கவுண்டமணி, எஸ். எஸ்.சந்திரன் காமெடி

பெரிய படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கவுண்டமணி, எஸ். எஸ்.சந்திரன் காமெடி காட்சிகள் எல்லாம் வேற லெவல் இருக்கும்.

ஒரு காட்சியில் கவுண்டமணி கட்டிலில் அமர்ந்து இருப்பார். அப்போது எஸ். எஸ்.சந்திரன் உள்ளே வரும் போதே அம்மா, தாயே, மகாலட்சுமி என்று அழைத்து கொண்டு வருவார். மகாலட்சுமி பிச்சைக்காரன் வந்து இருக்கிறான் சாப்பாடு போடு என்று கவுண்டமணி சொல்வார். 

உள்ளே வரும் அவர், கரடிக்கு சட்டை போட்ட மாதிரி யாரு உட்கார்ந்து இருப்பது யார் என சொல்லுவார். ஆனால் எஸ். எஸ்.சந்திரன் நான் தான் மாப்பிளை என சொல்வது போல் நான் எழுதி கொடுத்து இருந்தேன். 

கோபமாக கட் சொன்ன கவுண்டமணி

இந்த காமெடியை கேட்டவுடன் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். இதே இருக்கலாம் என நினைத்தோம். ஆனால் கவுண்டமணி கோபமாக கட் என்று சொல்லிவிட்டு ராஜகோபால் அந்த காமெடி பேப்பரை கொடுங்கள் என வாங்கி படித்தார். 

டயலாக்கில் இல்லாததை எப்படி சொல்லலாம்

நான் அந்த மாதிரி எதுவும் இல்லை, அது அவர் சொன்னது தான் என சொல்லிவிட்டேன்.  எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று சொன்னேன். ஆனால் கவுண்டமணி சிரிக்கிறார்கள் என்றெல்லாம் முடியாது. நான் யாருமே தெரியாமல் பிச்சைக்காரன் என்று சொல்வது ஒரு நியாயம். அவர் வேண்டுமென்றே டயலாக்கில் இல்லாததை எப்படி சொல்லலாம் என்று கோபித்துக் கொண்டார். 

நடிக்க முடியாது

ஒரு கட்டத்தில் நடிக்க முடியாது என்று சொன்னார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே சில கசப்பான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

இருவரும் நண்பர்கள் என்றாலும் ஒருவரை ஒருவர் மோதி கொளவர்கள். அதிலும் இந்த படத்தில் இவர்கள் போடும் சண்டை உண்மை தான். அதை அப்படியே காட்சியாக எடுத்துவிட்டோம். 

நிஜமான சண்டையில் முடிந்த பெரிய மருது

இன்னொரு காட்சியில் இருவரும் பயங்கரமாக மோதி கொண்டார்கள்.  அவர்கள் பயங்கரமாகச் சண்டை போட்டார்கள். உண்மையாலுமே அவர்கள் இப்படி போடுவார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. நிஜமான சண்டை ஆகவே இரண்டு பேரும் போட்டிருந்தார்கள். அந்த அளவிற்கு பெரிய மருது படம் எடுக்கப்பட்டது “ என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.