தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Antony Wife: 'தங்கமே..உனக்காக நான்'.. இறந்த மகளை நினைத்து கதறும் விஜய் ஆண்டனி மனைவி

Vijay Antony Wife: 'தங்கமே..உனக்காக நான்'.. இறந்த மகளை நினைத்து கதறும் விஜய் ஆண்டனி மனைவி

Aarthi V HT Tamil
Dec 11, 2023 12:55 PM IST

விஜய் ஆண்டனி மனைவி இறந்த தன் மகளை நினைத்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி!

ட்ரெண்டிங் செய்திகள்

பள்ளியில் நன்றாக படித்து வந்த அவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் செய்திகள் பரவியது.

அவரின் மறைவு தந்த துக்கத்தில் இருந்து இன்னும் விஜய் ஆண்டனி மீளவில்லை. இதனால் தன் ஆசை மகளின் பெயரில் இனி நல்ல காரியங்கள் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மகளின் புகைப்படம் பகிர்ந்து எமோஷனலாக பதிவு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

அதில், “ மீரா தங்கம் உங்கள் பியானோ உங்கள் தொடுதலுக்காக காத்திருக்கிறது மற்றும் ஏங்குகிறது, நாம் அனைவரும் இன்னும் நம்பிக்கையின்மையில் இருக்கிறோம், நீங்கள் சீக்கிரம் சென்றுவிட்டீர்கள் குழந்தை,

இந்த உலகம் உனக்காக இல்லை, ஆனால் அம்மா இன்னும் இங்கே இருக்கிறேன். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் உன்னைச் சந்திக்கும் வரை நன்றாகச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருங்கள் என்று லாரா மிஸ் செய்கிறார் “ என்றார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு, தமிழ்நாட்டில் நிறைய 2கே கிட்ஸ்கள் ரசிகர்களாக வலம் வருகின்றனர்.

விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டு இருக்கிறார். மெல்ல மெல்ல தன் மகள் இறப்பில் இருந்து வெளியே வந்து விஜய் ஆண்டனி படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point