Viduthalai: 'அறிவு நாணம் இருக்கா வெற்றி' கொந்தளித்த சோளகர் தொட்டி ஆசிரியர்!
விடுதலை சினிமாவும் சில பார்வைகளும் (ச.பாலமுருகன்)

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கினார். இந்த திரைப்படத்தின் முதல்பாகம் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது என பலரும் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே சோளகர் தொட்டி நாவல் வெளியீட்டாளர் அனுஷ் விடுதலை கதை குறித்த சர்ச்சையில் வெற்றிமாறன் தன் தரப்பு விளக்கத்தை அளிப்பது அவரது கடமை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சோளகர் தொட்டி நாவலின் ஆசிரியர் ச.பாலமுருகன், "வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் பல இளம் தலை முறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர் அவர் ஒரு படைப்பை அனுகும் போது அறிவு நானயத்தோடு அனுகி இருக்க வேண்டும் என குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து ச.பாலமுருகன் தன் முகநூலில் கூறியதாவது,
விடுதலை சினிமாவும் சில பார்வைகளும்
"வெற்றி மாறனின் விடுதலை திரைப்படத்தின் முன் வெளியீட்டு காட்சிகள் கடந்த மாதம் வந்த போது நண்பர் ஒருவர் வனம் சார்ந்த பின்னனி மற்றும் ஒரு காவலர் பார்வையில் கதை நகர்தல் என அறிந்து, சோளகர் தொட்டி நாவலின் காட்சிகள் இருக்குமோ? என அய்யம் தெரிவித்தார். ஆனால் நான் வெற்றி மாறன் என்ற இயக்குனரை நேரில் அறிந்ததில்லை என்ற போதும், தொடர்ந்து நாவல்களின் மைய கதையை திரைப்படமாக்கு இயக்குனராகவும், இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவராகவும் இருப்பதாலும், மேலும் அந்த திரைப்படமானது எழுத்தாளர் ஜெய மோகனின் கதையை அடிப்படையாக கொண்டது என இருந்ததாலும் சில கடந்து போகும் காட்சிகளை தவிர்த்து சோளகர் தொட்டி தாக்கம் இருக்காது என உறுதியாக கருதினேன்.