VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!-indian actress regina new look from the film vidaamuyarchi was released with the tagline bravery knows no bounds - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!

VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!

Marimuthu M HT Tamil
Aug 11, 2024 08:47 PM IST

VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக். விடாமுயற்சி படத்தில் நடிகை ரெஜினாவின் புதிய லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!
VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!

நடிகர் அஜித் துணிவு படத்திற்குப் பின் நடித்துக்கொண்டிருக்கும் படம், விடாமுயற்சி. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்மையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் அஜித், காலை 7 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று, இரவு இரண்டு மணி வரை, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்த திரிஷா:

இப்படத்தில் நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜானில் படமாக்கியுள்ளார். இந்நிலையில் இப்படமானது அக்டோபர் 31ஆம் தேதி, தீபாவளியை ஒட்டி, ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இந்த ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியது. அவர் இரட்டை வேடத்தில் நடித்த எந்தவொரு படமும் இதுவரை தோல்வியைத் தழுவியது கிடையாது. குறிப்பாக, வாலி, வில்லன், வரலாறு, அட்டகாசம், பில்லா 1, அசல் ஆகியப்படங்களில் நடித்து இருந்தார்.

மேற்கூறிய அனைத்துப் படங்களும் அஜித்துக்கு நற்பெயரையும் தயாரிப்பாளருக்கு லாபத்தையும் ஈட்டித்தந்தன. அந்தவகையில் அஜித் இந்த சென்டிமென்ட் காரணமாக, விடாமுயற்சி படத்திலும் டபுள் ஆக்‌ஷனில் நடித்து இருப்பதாகத் தெரிகிறது.

ரசிகர்களை ஈர்த்த விடாமுயற்சி படத்தின் வெவ்வேறு லுக்குகள்:

சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் அஜித் டிரைவ் செய்யும்போது நடந்த விபத்தும், அதில் உடன்பயணித்த ஆரவ்வை காப்பாற்றும் விதமாக அஜித் நடந்துகொண்ட விதமும் பலரால் பாராட்டப்பட்டது.

அதன்பின் வெளியிடப்பட்ட ‘விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் லுக்கில் தனி ஒரு நபராக அஜர்பைஜானில் ஒரு பணப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு, தன் சால்ட் அண்ட் பெப்பர் தலையுடன் ஸ்டைலாக நடந்துவருகிறார், அஜித். அதன்பின், காரில் வேகமாக வண்டி ஓட்டும் படமும் மார்பில் கை வைத்த நிலையில் இருந்த படத்தினையும் கொலாஜ் செய்து, செகண்ட் லுக்காக வெளியிட்டது படக்குழு. இந்நிலையில், நடிகை திரிஷாவுடன் இளமையான தோற்றத்தில் இருக்கும் படத்தை மூன்றாவது லுக்காக வெளியிட்டுள்ளது, விடாமுயற்சி படக்குழு. அதில் அஜித் கண்ணாடி அணிந்து, கருகரு முடியுடன், திரிஷாவுடன் நிற்கும் சிரித்த மூன்றாவது லுக்கினை சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது.

இறங்கிய ரெஜினாவின் லுக்:

இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் ரெஜினா கசாண்ட்ராவின் புதிய லுக்கை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ளது.  அந்த லுக்கில், தனியாக சாலையில் நடந்து வரும் ரெஜினாவின் பின்புலத்தில், அஜித்தும் திரிஷாவும் இருப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டேக் லைன் ஆக வீரத்திற்கு எல்லையே இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்கள் ஆர்வமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

குட் பேட் அக்லிக்காகவும் சிரத்தை காட்டிய அஜித்:

விடாமுயற்சி படத்திற்கு இடையே, குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆனார் அஜித்குமார். இந்தப்படத்தை அஜித்தின் ரசிகரும், மார்க் ஆண்டனி படம் மூலமாக 100 கோடி வசூலித்து கொடுத்த இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இடையில் அஜித்துடன் இருக்கும் படத்தை வெளியிட்ட இயக்குநர் ஆதிக், “ உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டைக்கண்டு வியக்கிறேன். எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லவ் யூ மை சார்” என்று பதிவிட்டு இருந்தார். இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'குட் பேட் அக்லி’ படக்குழுவினர் சார்பில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 19ல் வெளியிடப்பட்டு அதிமான நபரால் பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆத்விக் ரவிச்சந்திரன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோரின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் கணக்கில் மட்டும் இதுவரை, 41 மில்லியன் பார்வையாளர்கள், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை பார்த்து ரசித்துள்ளனர்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.