தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar : ‘பாசமுள்ள மனிதனப்பா’ விடாத துரத்திய ஃபேன்; கொஞ்சி குலாவிய அஜித்; விருந்தில் விடாமுயற்சி லுக்? - வீடியோ!

Ajithkumar : ‘பாசமுள்ள மனிதனப்பா’ விடாத துரத்திய ஃபேன்; கொஞ்சி குலாவிய அஜித்; விருந்தில் விடாமுயற்சி லுக்? - வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 23, 2023 11:58 AM IST

அஜித் தற்போதைய தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விடாமுயற்சி!
விடாமுயற்சி!

ட்ரெண்டிங் செய்திகள்

எதிர்மறை கதாபாத்திரம் ஒன்றில் நடிகை அர்ஜூன் தாஸ் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தேதிகள் ஒத்துவரதா காரணத்தால் அவருக்கு பதிலாக பிக்பாஸில் பிரபலமான ஆரவ் கமிட் ஆனதாக சொல்லப்படுகிறது. அண்மையில் அஜித்தை பாலிவுட் நடிகர் சஞ்சய் சந்தித்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து அவருக்கும் இந்தப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரம் இருக்கும் என்று தெரிகிறது.

 

‘வேதாளம்’ ‘விவேகம்’ படங்களைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைகிறார் அனிருத். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா இந்தப்படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் முன்னதாக வெளியான நிலையில், அதனைத்தொடர்ந்து அந்தப்படம் தொடர்பான எந்த அப்டேட்டுமே வெளியாக வில்லை.

 

இதனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் படம் குறித்தான அப்டேட்டுகளை கேட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு யாரும் செவிமடுக்க வில்லை. அஜித்தும் ஜாலியாக ஓமன் நாட்டுக்கு பைக் டூர் சென்று விட்டார். இதனால் படம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில், சந்திரமுகி 2 இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற சுபாஷ்கரன் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.

நேற்று முன் தினம் அஜித் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு அவர் வந்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவரை பார்த்த ரசிகர் ஒருவர் அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறுவதும், அவரை மறைமுகமாக வீடியோ எடுத்த நபரை வேண்டாம் என்று அஜித் கூறுவதும் தொடர்பான காட்சிகள் அதில் இடம் பெற்று இருக்கின்றன.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்