Jai Bhim: சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jai Bhim: சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம்

Jai Bhim: சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம்

Aarthi V HT Tamil Published Oct 22, 2022 07:05 PM IST
Aarthi V HT Tamil
Published Oct 22, 2022 07:05 PM IST

ஜெய் பீம் திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.

ஜெய் பீம்
ஜெய் பீம்

அதில், “கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் 25 ஃப்யூச்சர் மற்றும் 20 Non Feature படங்கள் திரையிடப்படவுள்ளன. 53ஆவது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் திரையிடப்படும் படங்களை தேர்வு செய்ய சினிமாத்துறை வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 354 ஃப்யூச்சர் படங்கள் பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 25 படங்களில் தமிழில் வெளிவந்த ஜெய்பீம் (இயக்குனர் தா.செ. ஞானவேல்), கிடா (இயக்குனர் ஆர்.ஏ. வெங்கட்) ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளன.

மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஆர்.ஆர்.ஆர்., டானிக், அகன்டா, தர்ம்வீர் முக்கம் போஸ்ட் தானே ஆகிய 5 படங்கள் தேர்வாகியுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.