HBD Abhirami : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல.. அன்னலட்சுமி நினைவிருக்கா? நடிகை அபிராமி பிறந்தநாள் இன்று!
HBD Abhirami: விருமாண்டி படத்தில் நடித்த பிறகு எந்த சினிமாவிலும் நடிக்காமல் பத்து ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அதற்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் அபிராமி.

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல.. அன்னலட்சுமி நினைவிருக்கா? நடிகை அபிராமி பிறந்தநாள் இன்று!
கேரள மாநிலம் திருவென்றம் மாநிலத்தில் ஜூலை 26 ஆம் தேதி 1983 ஆம் ஆண்டு பிறந்தவர் அபிராமி. கோபி குமார் புஷ்பா தம்பதிக்கு பிறந்தார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்கு பிறகு ஆள் இடம் தெரியாமல் மறைந்து விட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து தங்களது இடத்தை நிரூபித்து காட்டுவார்கள்.