Dushara Vijayan: ‘கழுவேத்தி மூர்க்கன்’ கவிதா என் மனதிற்கு நெருக்கமானவள்' -துஷாரா விஜயன் பேட்டி!
‘கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் நடித்தது பற்றி நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து இருக்கிறார்.

துஷாரா விஜயன்!
'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை துஷாரா விஜயன். இந்த நிலையில் இன்று (மே 26, 2023) அருள்நிதி ஜோடியாக அவர் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்'. இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் அணியுடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இது குறித்து நடிகை துஷாரா விஜயன் கூறும்போது, “எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும்.