Viduthalai Part 2: வீரமும், காதலும்.. வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
Viduthalai Part 2: விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Viduthalai Part 2: வீரமும், காதலும்.. வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Viduthalai Part 2: நடிகர் விஜய்சேதுபதிக்கு அறிமுகமே தேவையில்லை. அவரது நடிப்பில், அண்மையில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’.
‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் வெளியான இந்த படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து இருக்கிறது.
வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி
அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து இருந்தார்.அதில் அவருக்கு பெரிய பேர் கிடைத்தது.