Manju Warrier: ரஜினி கூறிய அந்த விஷயத்தை மறக்க மாட்டேன்!உங்களை விட அதிக முறை மனசிலாயோவுக்கு ஆடியுள்ளோம் - மஞ்சு வாரியர்
ரஜினி கூறிய அந்த விஷயத்தை மறக்க மாட்டேன். மனசிலாயே பாடலுக்கு உங்களை விட பல முறை கேட்டு, ஆடியுள்ளோம் என வேட்டையன் இசை வெளியீடு நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.

Manju Warrier: ரஜினி கூறிய அந்த விஷயத்தை மறக்க மாட்டேன்..உங்களை விட பல முறை மனசிலாயே கேட்டு, ஆடியுள்ளோம் - மஞ்சு வாரியர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் வேட்டையன். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை ஜெய் பீம் படப்புகழ் ஞானவேல் இயக்கியுள்ளார்.
ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் வேட்டையன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் ஃபகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
படத்தின் இசை வெளியிட்டு நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.