Singeetam Srinivasa Rao: கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர்..அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் அப்பு ரகசியம் தெரிந்தவர் பிறந்தநாள்-vetran movie director singeetam srinivasa rao celebrating his birthday today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singeetam Srinivasa Rao: கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர்..அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் அப்பு ரகசியம் தெரிந்தவர் பிறந்தநாள்

Singeetam Srinivasa Rao: கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர்..அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் அப்பு ரகசியம் தெரிந்தவர் பிறந்தநாள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 21, 2024 05:00 AM IST

HBD Singeetam Srinivasa Rao: கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர், தென்னிந்திய சினிமாக்களில் பல புதிய முயற்சிகளின் முக்கிய புள்ளி, மிக முக்கியமாக அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் அப்பு ரகசியம் ஒளித்து வைத்திருப்பவர், பல விருதுகளை அள்ளிய பழம்பெரும் இயக்குநராக இருப்பவர் சிங்கீதம் சீனிவாச ராவ்

Singeetam Srinivasa Rao: கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர்..அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் அப்பு ரகசியம் தெரிந்தவர் பிறந்தநாள்
Singeetam Srinivasa Rao: கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர்..அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் அப்பு ரகசியம் தெரிந்தவர் பிறந்தநாள்

சினிமாக்கள் புதுமையான பரிசோதனை முயற்சிகள் செய்தவர்களில் முக்கியமானராக சிங்கீதம் சீனிவாச ராவ் இருந்து வருகிறார். தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன், கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஆகியோரின் ஆஸ்தான இயக்குநரான இருந்துள்ள இவர் இந்த இரு ஹீரோக்களின் சினிமா கேரியரிலும் முக்கிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குநராக உள்ளார்.

சினிமா பயணம்

ஆந்திரா மாநிலம் கூடுர் தான் சிங்கீதம் சீனிவாச ராவ் பிறந்தது. தந்தை ஆசிரியராகவும், தாயார் வயலினிஸ்டாகவும் இருந்துள்ளனர். சிறு வயதில் இருந்த இசை மீதும், நடிப்பு மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ள இவர் தனது திறமை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் வெளிக்காட்டி வந்துள்ளார். கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த இவர், 1950 காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்த கே.வி. ரெட்டியிடம் உதவி இயக்குநராக சேர முயற்சித்தது தோல்வி அடைந்தது.

இதையடுத்து ஆசிரியராகவும், பத்திரகையாளராகவும் வேலை பார்த்தவாறே மனம் தளராமல் நாடக எழுத்து பணிகளை மேற்கொண்டார். இவரது நாடகங்கல் அரங்கேற்றப்பட்டு விருதுகளையும் வென்றன.

சிங்கீதம் சீனிவாச ராவ் திறமையை கண்ட கே.வி. ரெட்டி அவருக்கு திரைக்கதை எழுதும் வாய்ப்பை அளித்தார். மெல்ல மெல்ல கே.வி. ரெட்டியின் இணை இயக்குநராக உயர்ந்து அந்த காலகட்டத்தில் ஹிட்டான டோங்கா ராமுடு, மாயாபஜார் போன்ற படங்களில் பணியற்றினார்.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முதல் படம்

தெலுங்கு படங்கள் என்றால் மாஸ் மசாலா அம்சங்கள் கொண்ட கதையாக காலம் காலமாக இருந்து வரும் நிலையில், ஆஃப் பீட் கதையை வைத்து 1972இல் நீதி நிஜயதி என்ற படத்தை இயக்கினார். விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த பாடல் கமர்ஷியலாக தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய இரண்டாவது படம் தமிழ் சினிமாவில் இவரை அறிமுகமாக்கியது. பழம்பெரும் ஹீரோ ஸ்ரீகாந்த், லட்சுமி நடிப்பில் உருவான இந்த படம் தேசிய விருதை வென்றது.

இதன் தொடர்ந்து தெலுங்கில் வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படங்களை இயக்கி முக்கிய இயக்குநராக உருவெடுத்தார்.

கமல்ஹாசன் - சிங்கீதம் சினிமாவாச ராவ் காம்போ

கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்தார் சிங்கீதம் சீனிவாசராவ். இந்த படத்துக்கு முன்னரே தெலுங்கில் கமலை வைத்து சொம்மோகதிதி சோகோகாதிதி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தமிழை தொடர்ந்து கன்னடத்தில் ராஜ்குமார் நடித்த ஹாலு ஜெனு என்ற படம் மூலம் கன்னட திரையலகில் அறிமுகமானார். கமலின் ராஜபார்வை பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் தனது அடுத்தடுத்த படங்களில் சிங்கீதம் சீனிவாச ராவுடன் இணைந்து பல கிளாசிக் ஹிட்களை கொடுத்தார்.

அப்படித்தான் இந்த காம்போ தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை தந்தார்.

வசனங்கள் இல்லாமல் சைலண்ட் படமாக பிளாக் காமெடி பாணியில் கமல்ஹாசன், அமலா நடிப்பில் வெளியான புஷ்பக விமானா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றியை பெற்றதோடு, சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வென்றது. தமிழில் இந்த படம் பேசும் படம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

தமிழில் கமல் தவிர பிரபுவை வைத்து சின்ன வாத்தியார், ஜோதிகா நடித்த லிட்டில் ஜான் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

விருதுகளின் மன்னன்

இந்திய திரையுலகில் இவர் வாங்காத விருதுகளை இல்லை என்று கூறும் அளவில் சிறந்த, முக்கிய விருதுகளை அனைத்தையும் வென்றவராக உள்ளார். தேசிய விருது. பிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆந்திரா மாநில அரசின் நந்தி விருது, கர்நாடக மாநில அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இந்த ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கும் கல்கி 2898 ஏடி படத்தின் உருவாக்கத்தில் வழிகாட்டியாக பின்னணியில் பெரும் பங்கு வகித்துள்ளார் சிங்கீதம் சீனிவாச ராவ்.

கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர், தென்னிந்திய சினிமாக்களில் பல புதிய முயற்சிகளை செய்த பெருமைக்குரியவர், விருதுகளின் மன்னன் ஆக இருந்து வரும் சிங்கீதம் சீனிவாச ராவ் பிறந்தநாள் இன்று.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.