Jyothika: பிலிம்பேரில் கட்டற்ற கவர்ச்சி.. ‘ஜோதிகா அப்படி ட்ரெஸ் போட்டா என்ன இப்ப?’ - சாட்டை எடுத்த பிரபலம்!-cheyyaru balu latest interview about jyothika at filmfare awards south 2024 red carpet tfpc - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jyothika: பிலிம்பேரில் கட்டற்ற கவர்ச்சி.. ‘ஜோதிகா அப்படி ட்ரெஸ் போட்டா என்ன இப்ப?’ - சாட்டை எடுத்த பிரபலம்!

Jyothika: பிலிம்பேரில் கட்டற்ற கவர்ச்சி.. ‘ஜோதிகா அப்படி ட்ரெஸ் போட்டா என்ன இப்ப?’ - சாட்டை எடுத்த பிரபலம்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 12, 2024 06:49 AM IST

Jyothika: இங்கு பார்க்கும் கோலிவுட் சினிமா என்பது வேறு, கன்னட சினிமா என்பது வேறு, அதேபோல பாலிவுட் சினிமா என்பது வேறு.. அப்படி பாலிவுட் சினிமா வளையத்திற்குள் ஜோதிகா சென்ற போது அதற்கு ஏற்றார் போல ஆடை அணிந்து கொண்டிருக்கிறார். - சாட்டை எடுத்த பிரபலம்!

Jyothika: பிலிம்பேரில் கட்டற்ற கவர்ச்சி..  ‘ஜோதிகா அப்படி ட்ரெஸ் போட்டா என்ன இப்ப?’ - சாட்டை எடுத்த பிரபலம்!
Jyothika: பிலிம்பேரில் கட்டற்ற கவர்ச்சி.. ‘ஜோதிகா அப்படி ட்ரெஸ் போட்டா என்ன இப்ப?’ - சாட்டை எடுத்த பிரபலம்!

ஜோதிகா இப்படியா ஆடை அணிந்து வருவது

குறிப்பாக, சிவகுமார் வீட்டு மருமகளான ஜோதிகா, இப்படியா ஆடை அணிந்து வருவது என்ற ரீதியில் கமெண்டுகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார். 

இது குறித்து அவர் பேசும் போது, “  ஊருக்கு தகுந்தார் போல உடை அணிய வேண்டும் என்ற பழமொழி ஒன்று உண்டு. நீங்கள் இங்கு பார்க்கும் கோலிவுட் சினிமா என்பது வேறு, கன்னட சினிமா என்பது வேறு, அதேபோல பாலிவுட் சினிமா என்பது வேறு.. அப்படி பாலிவுட் சினிமா வளையத்திற்குள் ஜோதிகா சென்ற போது அதற்கு ஏற்றார் போல ஆடை அணிந்து கொண்டிருக்கிறார்.

அதை இவ்வளவு பெரிய விஷயமாக நாம் மாற்ற வேண்டிய தேவையே கிடையாது. அங்கு கஜோலும், கங்கனாகவும் கவர்ச்சியாக தான் ஆடை அணிந்து வந்தார்கள். அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லையே?; அப்படி இருக்கும் பொழுது ஜோதிகாவை குறிப்பிட்டு கேட்பது எதற்காக என்பது எனக்கு தற்போது வரை புரியவில்லை. நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஜோதிகா பிறந்து, வளர்ந்தது எல்லாமே மும்பைதான். அவர் இங்கு வந்து தமிழில் பிரபலமாகி, அதன் பின்னர் தான் தமிழில் முன்னணி நடிகையாக மாறினார். ஆக அடிப்படையாகவே அவருக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது.

நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களுக்கு நான் இன்னும் கூட ஒரு உதாரணம் சொல்கிறேன் நான் ஒரு முறை மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அப்போது, அங்கு இருந்த ஒரு பெண்மணி குடும்பப் பாங்காக சேலை அணிந்து கொண்டு என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். விமானம் மும்பை அருகே வந்தபோது, திடீரென்று அவர் பாத்ரூம் சென்று மிகவும் கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டு வெளியே வந்தார். 

எனக்கு அதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் கூட அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். காரணம் என்னவென்றால், மும்பை அப்படியான கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. எந்த ஊருக்கு தகுந்தார் போல நாம் மாற வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். சென்னையில் அந்த ஆடையை அவர் அணிந்து சென்றார் என்றால், கிட்டத்தட்ட நூறு கண்கள் அல்ல, ஆயிரம் கண்கள் அவரை நோக்கி திரும்பும். ஆனால் அவர் அங்கு அப்படி நடந்து கொள்ளவில்லை அவர் எங்கு அப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அங்கு அப்படி நடந்து கொண்டார். அது முழுக்க முழுக்க அவர்களின் உரிமையாகும்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.