Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் ஜாஸ்தி: பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்-vairamuthu estranged wife ponmani and his body demand is high said bayilvan ranganathan in an interview - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் ஜாஸ்தி: பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் ஜாஸ்தி: பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

Marimuthu M HT Tamil
Sep 25, 2024 10:31 PM IST

Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் ஜாஸ்தி - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர் பேட்டி வைரல் ஆகிவருகிறது.

Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் அதிகம் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்
Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் அதிகம் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

இதுதொடர்பாக பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,  ‘’சுசித்ராவை ஆரம்பத்தில் இருந்தே தெரியும். மிர்ச்சியில் வொர்க் செஞ்சது, அவங்க பின்னணிப் பாடகியாக இருந்தது, சுச்சி லீக்ஸ் சமயம் என எல்லா கட்டத்திலேயும் தெரியும். நல்லா படிச்சவங்க. பேசத் தெரிஞ்சவங்க. பேச்சே வித்தியாசமாக இருக்கும். அதனால் தான், அவங்க அந்த டிவி நடிகரை காதலிச்சு, கல்யாணம் செய்துகொண்டாங்க.

என் ஊகத்தின் அடிப்படையில் அவங்க போதைக்கு அடிமையாகிட்டாங்களோன்னு தோணுது. அப்போது இருந்த சுசித்ரா குடும்பப் பாங்கான பெண்ணாக இருந்தார். இப்ப இருக்கிற சுசித்ரா ஒல்லியா, மெலிஞ்சுபோய் ஒருமாதிரி இருக்காங்க, அதனால் அவங்களுக்குப் போதைப்பழக்கம் இருக்குமோ அப்படிங்கிற சந்தேகம் இருக்குது.

அதேபோல், பேசுறதும் தன்மையாக இல்லை. கொஞ்சம் ரஃபாக இருக்கு. ஆரம்பத்தில் வெளிநாட்டில் வைத்து வைரமுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பார்த்தார். நான் தப்பிட்டேன்னு சொன்னாங்க. இதை மீ டூ காலத்திலேயே சொன்னாங்க.

சுசித்ரா வைரமுத்துவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: பயில்வான் ரங்கநாதன்

அந்தப் புகார் இசைவானதா, ஏற்பானதா தெரியாது. கவிஞர் வைரமுத்து ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞருக்குப் பிடித்தமானவர். அதனால், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நெருக்கமாக இருக்கலாம். ஆகையால் போலீஸ்காரர்களும் பெரிய இடத்துப் பிரச்னை வேண்டாம்ன்னு ஒதுங்கியிருக்கலாம்.

மீண்டும் மீண்டும் சுசித்ரா வைரமுத்துவை சொல்வதற்கு அவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம்.

இவரும் ஒரு கவிதையில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போங்க, அப்படின்னு சொல்லியிருப்பார். அதற்கும் சுசித்ரா பதில் அளிச்சிருக்கு. ‘நான் பைத்தியமா, அப்போது நீ யாரு’ அப்படின்னு சரமாரியாக கேட்டுருச்சு.

எல்லாருக்கும் பாடி டிமாண்ட் அப்படிங்கிற பலவீனம் இருக்கும். அதை யார்கிட்ட நிறைவேத்தணுமோ, அவங்க கிட்ட தான் நிறைவேத்தணும். யார்கிட்ட கேட்கணுமோ, அவங்க கிட்ட தான்கேட்கணும்.சல்லி ஆட்கள்கிட்ட கேட்டுட்டோம்னு வைச்சுக்கங்க, நாறிப்போகும். அதுதான் இந்த மாதிரியான விஷயங்கள்.

கமல்ஹாசன் வெள்ளிப்பாத்திரத்தில் சப்ளைசெய்த போதை மருந்து: பயில்வான்

சுசித்ரா நல்லாயிருக்கும்போது எல்லோர்கூடயும் பார்ட்டிக்கு எல்லாம் போயிருக்கு. கமல்ஹாசன் வெள்ளி பாத்திரத்தில் வைத்து போதை மருந்து தருவார்ன்னு எல்லாம் சொல்லியிருக்கு.

ஆனால், சுசித்ராவின் பேச்சு சமீபகாலமாக முன்னுக்குப் பின், முரணாகத்தான் இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன் நான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன் அப்படின்னு சொன்னாங்க. இப்போது அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்றாங்க. அவங்க சொன்னதில் லேட்டஸ்ட் விஷயம் என்ன தெரியுமா. கார்த்திக் ராஜா ரொம்ப மோசம். இளையராஜா பிள்ளையா என்றே சந்தேகமாக இருக்கு. ஒரு முறை கார்த்திக் ராஜா, ரெக்கார்டிங் அப்போது சொன்னார். நான் காதலிச்சு கல்யாணம் பண்ணல. எங்கப்பா, அம்மா பார்த்த பொண்ணேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால்,எனக்கு டேட்டிங் என்றாலே என்னவென்று தெரியாது. என்னைய ஒரு நாள் டேட்டிங் கூட்டிட்டு போங்கலே அப்படின்னு சொன்னார். 

எப்படி பாருங்க. கெஞ்சுறமாதிரியும் இல்லாமல், மிரட்டுறமாதிரியும் இல்லாமல், வற்புறுத்துறமாதிரியும் இல்லாமல் நைசாக கேட்டிருக்கார். உடனே, அந்தப்பொண்ணு தொலைச்சுப்புடுவேன், தொலைச்சு அப்படின்னு சொல்லிட்டேன்னு சொல்லியிருக்காம். மற்றபடி கையைப் பிடிச்சு எல்லாம் இழுக்கல. வலிஞ்சிருக்கான்.

ஏதாவது ஸ்டூடியோவில் இருந்து கால் வந்தது என்றால், கார்த்திக் ராஜா இருக்காரான்னு கேட்டுட்டுத்தான் போவேன். கார்த்திக் ராஜா இருந்தால் போகமாட்டேன்னு சொல்லியிருக்காங்க. 

வைரமுத்துவின் மகன்கள் அவரிடம் சரியாகப் பேசுவதில்லை: பயில்வான்

வைரமுத்து ஆம்பளை தானே. அவருக்கு பாடி டிமாண்ட் இருக்கும் இல்லையா. அவர் என்ன ஏகபத்தினி விரதன்னு சொல்லியிருக்காரா. இன்னும் சொல்லப்போனால், அவரது இரண்டு மகன்களும் வைரமுத்துகிட்ட மனம்விட்டுப்பேசமாட்டாங்க தெரியுமா. வைரமுத்துவின் மனைவி வைரமுத்துவோடு வாழவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா?. அவங்கவங்க அவங்க வேலையைப் பார்த்திட்டு இருக்காங்க.. வைரமுத்து தனியாகத்தான் இருக்கிறார்.

இது இன்று நேற்று அல்ல. அதற்கு என்ன காரணம் என்றால், கவிஞர்கள் எல்லாருமே அப்படித்தான். கவிஞர் வாலியும் கடைசிக் காலத்தில் மனைவியை விட்டு பிரிஞ்சு தான் இருந்தார். கண்ணதாசன் மூன்று மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டார். அதற்கு அவர்களது வீட்டில் ஒத்துழைச்சாங்க.

கவிஞர்கள் என்பவர்கள் கற்பனை உலகத்தில் மிதக்கிறவங்க. கற்பனை விஷயத்தில் மிதக்க இந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்படுவதுண்டு.

அப்போது எல்லாம் இதை எல்லோரும் வெளிப்படையாக சொன்னது இல்லை. நடிகைகளும் சினிமா என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். யாரைப் பற்றியும் பேசக்கூடாது அப்படின்னு கட்டுப்பாடாக வாழ்ந்தாங்க. அது அந்தக் காலம். இப்போது அப்படியில்லை.

அதிலும் கவிஞர்கள் கற்பனையில் மிதப்பதன் காரணமாக, தங்களுடைய விருப்பங்களை அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள நினைப்பார்கள். அப்போது இருந்தவங்க, ஒத்துக்கிட்டாங்க. சம்மதிச்சாங்க. வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது நேர்மாறாக இருக்கு. 

சர்ச்சைகளைப் பொறுத்தவரை இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு பாடலில் சண்டை வந்தது. அதனால், இளையராஜா இசையில் வைரமுத்து பாட்டு எழுதுறது நின்னுப்போச்சு. அப்புறம் வந்து, வைரமுத்து ஒரு சுகப்பிரியர். சிலர் வந்து வைரமுத்துவை சாமியாக நினைத்து அவங்களை ராதையாக நினைச்சுட்டுப்போவாங்க. அது தவறு இல்லை. மீண்டும் சந்திப்போம். வாழ்க வளமுடன்'' என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். 

நன்றி: மெட்ரோ ரயில்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.