Singer Suchitra: என்ன வள்ளுவரா? கேவலமா இருக்கு.. வைரமுத்துவை கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா
Singer Suchitra: அவர் என்ன பெரிய பாடல் வரி எழுதிவிட்டார்? பெண்களை குறி வைத்து மட்டும் தான் அவர் எழுதுவார். ' மே மாசம் 98 ' -ல் பாடல் வரி எப்படி இருக்கிறது. எனக்கு அந்த பாடல் பிடிக்கவே இல்லை என பாடகி சுசித்ரா கூறினார்.
வைரமுத்து, அவருடன் படுக்கையை பகிர்வதற்காக ஷாம்பு பாட்டிலை பரிசாக கொடுத்த கதையை பாடகி சுசித்ரா பகிர்ந்து இருந்தார். அதற்கு வைரமுத்து, பாடகி சுசித்ரா என்று பெயர் கூறிப்பிடாமல் நேற்று ( செப் 20 ) எக்ஸ் தளத்தில் தக்க பதிலடி கொடுத்தார். அவர் பதிவு வெளியிட்டவுடன், பலரும் பாடகி சுசித்ராவுக்கு எதிராகவும், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பேச ஆரம்பித்தார்கள்.
இதனால் கடுப்பான பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், “ வைரமுத்து என்ன வள்ளுவரா? அவர் என்ன பெரிய பாடல் வரி எழுதிவிட்டார்? பெண்களை குறி வைத்து மட்டும் தான் அவர் எழுதுவார். ' மே மாசம் 98 ' -ல் பாடல் வரி எப்படி இருக்கிறது. எனக்கு அந்த பாடல் பிடிக்கவே இல்லை. கேவலமாக இருந்தது. முதல் ரெகார்டிங் என்பதால் எதுவும் சொல்லவில்லை. அப்போதே முடிவு செய்துவிட்டேன் அடுத்த ரெகார்டிங்கில் சொல்லிவிட வேண்டும் என்று. வளர்ந்து வரும் எந்த ஒரு புதிய லிரிசிஸ்ட்டையும் அவர் வளர விடுவது இல்லை.
பெரிய லிரிசிஸ்ட் வாலி
என்னை பொறுத்தவரை பெரிய லிரிசிஸ்ட் வாலி தான். அவர் தான் நேர்மையாக பேசுவார். அவர் எழுதிய வரியில் நான் நிறைய பாடி இருக்கிறேன். ஒரு முறை கூட அவர் இழிவாக பேசியதே இல்லையே.
இதே நிலைமை தான்
ஆசீர்வாதம் தான் செய்து இருக்கிறார். ஒரு முறை கூட அவர் என்னை தவறாக பேசியதும் இல்லை, தவறாக பார்த்ததும் இல்லை. நான் சொல்வதை நம்பாமல், இருந்தால் நாளை உங்கள் வீட்டின் பெண்களுக்கும் இதே நிலைமை தான். அப்பவும் அவருக்கே ஆதரவு கொடுங்கள் " என பேசி உள்ளார்.
வைரமுத்து வெளியிட்ட பதிவு
தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்திய பாடகி சுசித்ராவுக்கு, வைரமுத்து தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், “ வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்
தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்
இந்த நோய்க்கு
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்
அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்
உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும் “ எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் வந்த வண்ணம் இருந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சினிமா தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!
டாபிக்ஸ்