தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஐஸ்வர்யா.. கார்த்திக் மீது காதல் கொள்ளும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஐஸ்வர்யா.. கார்த்திக் மீது காதல் கொள்ளும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்

Marimuthu M HT Tamil
May 11, 2024 03:03 PM IST

Karthigai Deepam: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலில், சனி மற்றும் ஞாயிறு எபிசோடில், ஐஸ்வர்யாவை கன்னத்தில் அடித்த அபிராமி பற்றியும்; கார்த்திக் மீது ரம்யாவுக்கு வரும் ஈர்ப்பு பற்றியும் தெரியவருகிறது.

Karthigai Deepam: வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஐஸ்வர்யா.. கார்த்திக் மீது காதல் கொள்ளும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஐஸ்வர்யா.. கார்த்திக் மீது காதல் கொள்ளும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்று விஷயம் அபிராமிக்கு தெரிய வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

ஐஸ்வர்யாவை கன்னத்தில் அடித்த அபிராமி:

அதாவது, அபிராமி, ஐஸ்வர்யாவை கன்னத்தில் அறைந்து ஹாலிற்கு அழைத்து வந்து, மீண்டும் அறைய, அருண் ‘’எதுக்கு மா புள்ளத்தாச்சி பொண்ணை அடிக்கறீங்க'' என்று கோபப்பட அபிராமி ‘’அவ கர்ப்பமே இல்ல, இவ்வளவு நாளா நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்து இருக்கா'' என்ற உண்மையை உடைக்கிறார். இதனால், அருணும் அவளை அறைகிறான். ‘’இனிமேல், இந்த வீட்டில் உனக்கு உனக்கு இடமில்லை'' என்று துரத்துகிறான்.

ஐஸ்வர்யா ரூமுக்குள் துணி மணிகளை எடுத்து வைத்து கொண்டிருக்க, தீபா அங்கு வந்து, ‘’அக்கா நான் வீட்ல இருக்கவங்க கிட்ட பேசுறேன். அத்தைக்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது என்று எனக்குத் தெரியல’’ என்று சொல்கிறாள். ஐஸ்வர்யா, ’’நீ பண்ண வரைக்கும்போதும். நான் திரும்பி இந்த வீட்டிற்குள் வரும் போது நீ இந்த வீட்ல இருக்கமாட்ட’’ என்று சவால் விட்டுவிட்டு கிளம்புகிறாள்.

ரியா இதை பார்த்து இனிமே மூத்த மருமகளாக நம்ம ராஜ்யம் என்று சந்தோசப்படுகிறாள். அடுத்து ஐஸ்வர்யா ஒரு பார்க்கிற்கு ரியாவை வர வைத்து, ’’அந்த தீபாவை சும்மா விடக் கூடாது, அங்க நடக்கிற எல்லா விஷயத்தையும் எனக்கு தெரியப்படுத்து’’ என்று சொல்ல ரியா மைண்ட் வாய்ஸில் ’’உன்னை வெளியே துரத்த ஸ்கெட்ச் போட்டதே நான் தான்’’ என்று நினைத்துக்கொள்கிறாள்.

கார்த்திக் மீது ரம்யாவுக்கு வரும் ஈர்ப்பு:

அடுத்து கம்பெனியில் கார்த்திக் வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென ஒருவன் ரவுண்ட்ஸ் வந்த ரம்யாவைக் கத்தியால் குத்த வர, கார்த்திக் இடையில் புகுந்து ரம்யாவை காப்பாற்றுகிறான். இந்த மோதலில் கார்த்திக்கு லேசான காயம் ஏற்படுகிறது. உடனே, ரம்யா அவனுக்கு தனது கர்சீப்பால் கட்டு போட்டுவிடுகிறாள்.

இதைத்தொடர்ந்து, கையில் கட்டுடன் கார்த்திக் வீட்டிற்கு வர, தீபா அதைப் பார்த்து பதற, இவன் நடந்த விஷயங்களை சொன்னதும் தீபா, பொஸசிவ்வில், ‘’அந்த கர்சீப்பை துவைத்து நாளைக்கு அவங்க கிட்ட கொடுத்துடுங்க’’ என்று சொல்கிறாள். மறுபக்கம் ரம்யா, கார்த்திக் தனக்காக செய்த உதவியை நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்க, அவன் மீது ஒரு ஈர்ப்பு உருவாகிறது.

மறுநாள் தீபாவும் அபிராமியும் கோயிலுக்கு நடந்துசெல்லும்போது, அந்த வழியாக சென்ற கார் அபிராமி மீது சேற்றை வாரி இறைக்க தீபா கல்லை எடுத்து கண்ணாடியை உடைக்கப்போகும் போது ரம்யா கீழே இறங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலில் பாருங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்