தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: வசமாக சிக்கிய ஐஸ்வர்யா.. ஸ்கெட் போட்டு தூக்கிய தீபா! - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: வசமாக சிக்கிய ஐஸ்வர்யா.. ஸ்கெட் போட்டு தூக்கிய தீபா! - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
May 10, 2024 05:41 PM IST

Karthigai Deepam: உண்மையைச் சொல்லு என்று கேட்க, இதையெல்லாம் ஒட்டு கேட்ட ரியா, அபிராமியிடம் சென்று, நீங்க என்கிட்டே பேச மாட்டிங்கனு தெரியும். தீபாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஏதோ பிரச்சினை, அதை தீர்த்து வையுங்கள் என்று சொல்லி கொளுத்தி போடுகிறாள் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: வசமாக சிக்கிய ஐஸ்வர்யா.. ஸ்கெட் போட்டு தூக்கிய தீபா! - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
Karthigai Deepam: வசமாக சிக்கிய ஐஸ்வர்யா.. ஸ்கெட் போட்டு தூக்கிய தீபா! - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா தூக்கி வீசிய மாத்திரை அட்டை, தீபா கையில் கிடைத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கர்ப்ப நாடகம் 

தீபா அந்த அட்டையை கொண்டு வந்து மீனாட்சியிடம் காட்ட, அவள், இது பீரியடை தள்ளி போடுவதற்கான மாத்திரை, அப்படினா, ஐஸ்வர்யா கேம் விளையாடிட்டு இருக்கா போல என்று சந்தேகப்படுகின்றனர். 

உண்மையை கண்டுபிடிக்க ஐடியா

பிறகு மீனாட்சி அவ வழக்கமா போற ஹாஸ்பிடலில், எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருத்தி இருக்கா, அவளை வைத்து உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று சொல்கிறாள். 

அதன் பிறகு, ஐஸ்வர்யாவை அந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று, வழக்கமான செக்கப் போல் பரிசோதனை செய்து ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்க்க, ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்ற விஷயம் தெரிய வருகிறது. இந்த ரிப்போர்ட்டுடன் வீட்டிற்கு வந்த தீபா, ஐஸ்வர்யா ரூமுக்குள் சென்று நீ கர்ப்பம் இல்ல தானே என்று கேட்க, ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.

அபிராமியிடம் தீர்த்து வையுங்கள் என்று சொல்லி கொளுத்தி போட்ட ரியா 

இருந்தாலும், நான் கர்ப்பமாக தான் இருக்கிறேன். நீ ஏதோ உளறிட்டு இருக்க என்று சமாளிக்க முயற்சி செய்கிறாள். தீபா நான் ஆதாரத்தோடு தான் வந்து கேட்கிறேன். 

உண்மையைச் சொல்லு என்று கேட்க, இதையெல்லாம் ஒட்டு கேட்ட ரியா, அபிராமியிடம் சென்று, நீங்க என்கிட்டே பேச மாட்டிங்கனு தெரியும். தீபாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஏதோ பிரச்சினை, அதை தீர்த்து வையுங்கள் என்று சொல்லி கொளுத்தி போடுகிறாள்.

டாக்டருக்கு போன் போட்டு விசாரிக்க, அவரும் ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்று உண்மையை சொல்லி விட்டார் 

அபிராமி, ஐஸ்வர்யா ரூமுக்கு வர, இவர்கள் பேசி கொண்டிருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். தொடர்ந்து, செக்கப் செய்த டாக்டருக்கு போன் போட்டு விசாரிக்க, அவரும் ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்று உண்மையை சொல்ல, அபிராமி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

முந்தைய எபிசோடில் நடந்தது என்ன? 

ரம்யாவின் கையைப்பிடித்த கார்த்திக்:

ஆபிசில் எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்க, ரம்யா ரவுண்ட்ஸ் வரும் போது, ஒருவன் கையில் வைத்திருந்த பார்ட்ஸை கிழே தவற விட்டு விட்டான். அதை பார்த்த ரம்யா, நீ எல்லாம் வேலை செய்ய தகுதியே இல்லாதவன் என்று கண்டபடி திட்டுயதோடு, அவனை அறையப் போகும் சமயத்தில், கார்த்திக் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான். 

தப்பு பண்ணா திட்டுற உரிமை

மேலும் அவன், தப்பு பண்ணா திட்டுற உரிமை உங்களுக்கு இருக்கு; ஆனால், ஒரு தொழிலாளியை கை நீட்டி அடிக்க, உங்களுக்கு உரிமை கிடையாது என்று சொல்லி, ரம்யாவை அடக்க, அவள் கோபமாக கேபினுக்கு செல்கிறாள். இதைப்பார்த்த மாணிக்கம், அவ்வளவு தான் இன்னைக்கு உன்னை வேலையை விட்டு அனுப்ப போறாங்க என்று சொன்னார். 

அதே போல் ரம்யா மேனஜரை கூப்பிட்டு, அந்த கார்த்திக்கை வர சொல்லுங்க, இன்னைக்கே அவனை வேலையில் இருந்து துரத்துறேன் என்று சொன்னாள். 

ஆனால் மேனஜர் ரம்யாவை அடக்க கார்த்திக் வேண்டும் என்பதால், கார்த்திக்கை நீங்கள் இப்போது வேலையை விட்டு அனுப்பி விட்டால், நீங்க தோற்று போன மாதிரி ஆகிரும் என்று சொல்லி, அவளது மனதை மாற்றினார். அதனை தொடர்ந்து, கார்த்திக்கை கூப்பிட்டு, நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு, ஹீரோயிசம் காட்டுற வேலையெல்லாம் வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தாள்.

ஐஸ்வர்யா போட்ட மாத்திரை - சந்தேகப்பட்ட தீபா!

அடுத்து அபிராமி வீட்டில், ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் ஏதோ மாத்திரை போட்டு, அந்த அட்டையை வெளியே தூக்கி போட, தீபா இதை கவனித்து, அந்த அட்டையை எடுத்து சென்று மீனாட்சியிடம் கொடுத்து என்ன மாத்திரை என்று விசாரிக்கச் சொன்னாள். 

பீரியட் தள்ளி போக மாத்திரை!

விசாரித்த போது அது, பீரியட் தள்ளி போவதற்கான மாத்திரை என்று தெரிய வருகிறது. இதனால் ஏதோ தப்பா இருக்கே என்று ஐஸ்வர்யா மீது அவர்களுக்கு சந்தேகம் வந்தது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்