தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam Update: ‘ரம்யா கையைப்பிடித்த கார்த்திக்; பீரியட் தள்ளிப்போக மாத்திரை! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam Update: ‘ரம்யா கையைப்பிடித்த கார்த்திக்; பீரியட் தள்ளிப்போக மாத்திரை! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
May 09, 2024 01:57 PM IST

Karthigai Deepam Update: ரம்யா மேனஜரை கூப்பிட்டு, அந்த கார்த்திக்கை வர சொல்லுங்க, இன்னைக்கே அவனை வேலையில் இருந்து துரத்துறேன் என்று சொல்கிறாள்.

மாத்திரையால் சிக்க போகும் ஐஸ்வர்யா.. ரம்யாவை மிரள விட்ட கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே!
மாத்திரையால் சிக்க போகும் ஐஸ்வர்யா.. ரம்யாவை மிரள விட்ட கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மீனாட்சி விவாகரத்து கேட்க, ஆனந்த் அந்த டாக்குமெண்டை கிழித்து போட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

ரம்யாவின் கையைப்பிடித்த கார்த்திக்:  

அதாவது,  ஆபிசில் எல்லாரும் வேலை செய்து கொண்டிருக்க, ரம்யா ரவுண்ட்ஸ் வரும் போது, ஒருவன் கையில் வைத்திருந்த பார்ட்ஸை கிழே தவற விட்டு விட்டான். அதை பார்த்த ரம்யா, நீ எல்லாம் வேலை செய்ய தகுதியே இல்லாதவன் என்று கண்டபடி திட்டுயதோடு, அவனை அறையப் போகும் சமயத்தில், கார்த்திக் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறான்.

தப்பு பண்ணா திட்டுற உரிமை

மேலும் அவன், தப்பு பண்ணா திட்டுற உரிமை உங்களுக்கு இருக்கு; ஆனால், ஒரு தொழிலாளியை கை நீட்டி அடிக்க, உங்களுக்கு உரிமை கிடையாது என்று சொல்லி, ரம்யாவை அடக்க, அவள் கோபமாக கேபினுக்கு செல்கிறாள். இதைப்பார்த்த மாணிக்கம், அவ்வளவு தான் இன்னைக்கு உன்னை வேலையை விட்டு அனுப்ப போறாங்க என்று சொல்கிறார்.

அதே போல் ரம்யா மேனஜரை கூப்பிட்டு, அந்த கார்த்திக்கை வர சொல்லுங்க, இன்னைக்கே அவனை வேலையில் இருந்து துரத்துறேன் என்று சொல்கிறாள். 

ஆனால் மேனஜர் ரம்யாவை அடக்க கார்த்திக் வேண்டும் என்பதால், கார்த்திக்கை நீங்கள் இப்போது வேலையை விட்டு அனுப்பி விட்டால், நீங்க தோற்று போன மாதிரி ஆகிரும் என்று சொல்லி, அவளது மனதை மாற்றுகிறார். அதனை தொடர்ந்து, கார்த்திக்கை கூப்பிட்டு, நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு, ஹீரோயிசம் காட்டுற வேலையெல்லாம் வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தாள். 

ஐஸ்வர்யா போட்ட மாத்திரை - சந்தேகப்பட்ட தீபா!

அடுத்து அபிராமி வீட்டில், ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் ஏதோ மாத்திரை போட்டு, அந்த அட்டையை வெளியே தூக்கி போட, தீபா இதை கவனித்து, அந்த அட்டையை எடுத்து சென்று மீனாட்சியிடம் கொடுத்து என்ன மாத்திரை என்று விசாரிக்கச் சொல்கிறாள். 

பீரியட் தள்ளி போக மாத்திரை!

விசாரித்த போது அது, பீரியட் தள்ளி போவதற்கான மாத்திரை என்று தெரிய வருகிறது. இதனால் ஏதோ தப்பா இருக்கே என்று ஐஸ்வர்யா மீது அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்