தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கார்த்திக்,தீபாவின் சாந்தி முகூர்த்தம்!அபிராமியின் சர்ப்ரைஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Karthigai Deepam: கார்த்திக்,தீபாவின் சாந்தி முகூர்த்தம்!அபிராமியின் சர்ப்ரைஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 07, 2024 02:59 PM IST

கார்த்திக்கும், தீபாவுக்கும் இடையே சாந்தி முகூர்த்தம் நடத்துவதற்கு ஜோதிடரிடம் விவாதிப்பதும், அலுவலகத்தில் மெஷின் இன்ஸ்டால் விஷயத்தில் கார்த்திக்கை கடிந்து கொள்ளும் ரம்யா என கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கவுள்ளன.

இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடில் கார்த்திக்,தீபாவின் சாந்தி முகூர்த்தம் பற்றி பேச்சு
இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடில் கார்த்திக்,தீபாவின் சாந்தி முகூர்த்தம் பற்றி பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

ஜோசியர் என்ட்ரி

அதாவது, தீபா ஒரு பாடலை பாடி முடிக்க அபிராமி அதை கேட்டு ரசித்து பாராட்டுகிறாள், பிறகு உனக்காக ஒரு விஷயம் பண்ண போறேன் என்று சொல்லி கொண்டிருக்க வீட்டுக்குள் ஜோசியர் என்ட்ரி கொடுக்கிறார். அபிராமி ஜோசியரை வரவேற்று உட்கார வைக்கிறாள்.

அதன் பிறகு கார்த்திக்கும், தீபாவுக்கும் கல்யாணமாகி ரொம்ப நாள் ஆகுது, ஆனால் இன்னும் நடக்க வேண்டியது எதுவும் நடக்கல என்று சொல்லி சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறித்து தர சொல்கிறார்கள். அதை கேட்டு தீபா எமோஷனாகிறாள். மீனாட்சியும், மைதிலியும் முருங்கை காயாக சமைத்து நினைத்ததை சாதிச்சிட்ட போல என்று கலாய்க்கின்றனர்.

தீபா நான் இதையெல்லாம் நினைச்சு சமைக்கல என்று சொல்லியும், அவளை கலாய்த்து எடுக்கின்றனர். அதன் பிறகு ஜோசியர் நாள் குறித்து தர மீனாட்சி இன்னைக்கு ஒரு நாள் நான் வீட்டுக்குள் வரேன், தீபாவோட ரூமை நான் அலங்காரம் செய்கிறேன் என்று சொல்கிறாள்.

மறுபக்கம் ரம்யாவும் கம்பெனியின் மாணிக்கம் கார்த்தியிடம் இன்னைக்கு ஒரு புது மெஷின் வருது, அதை இன்ஸ்டால் பண்ண போறாங்க, எப்படி பண்றாங்கனு பார்த்து கற்றுக்கொள்ளுமாறு என்று சொல்கிறார்.

ரம்யா கோபம்

மெஷினை இன்ஸ்டால் செய்யும் போது கார்த்திக் இதை இப்படி பண்ண கூடாது, அப்படி பண்ணா மெஷின் பத்திக்கிட்டு எரியும் என்று சொல்ல எல்லாரும் ஷாக்காக, ரம்யா கீழே இறங்கி வருகிறாள். நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு. இத்தனை வருஷமாக இவங்க எல்லாம் வேலை செய்யுறாங்க என்று சொல்லி கோபப்பட கார்த்திக் அமைதியாகி விடுகிறான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் கார்த்திக் சொன்னபடியே மெஷின் தீ பிடித்து எறிகிறது. இதனால் ரம்யா கோபமாகி கேபினுக்கு சென்று விடுகிறாள்.

கார்த்திக்கை கூப்பிட்டு இந்த முறை நீ சொன்ன மாதிரி நடந்து விட்டது என்பதற்காக மத்த விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைகிற வேலையை வச்சுக்காமல், உன்னுடைய வேலையை ஒழுங்கா பாரு என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறாள்.

வீட்டில் மீனாட்சியும், மைதிலியும் தீபாவை கலாய்த்தபடியே ரூமை தயார் செய்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் சீரியல்

இந்த சீரயலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் , அர்திகா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். விசித்ரா, மீரா கிருஷ்ணன், நடிகர் ராஜேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்தித்தில் தோன்றுகிறார்கள். விஜயகுமார், வனிதா விஜயகுமார், வடிவுக்கரசி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் டிவி சீரியல்கள் அதிகம் பேரால் பார்த்து ரசிக்ககூடிய கார்த்திகை தீபம் சீரியல் 2022 முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ பங்களா டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணாகோயில் சீரியலின் ரீமேக்காக கார்த்திகை தீபம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்