தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Trisha To Appear Special Cameo In Thalapathy Vijay Goat Movie

Trisha in GOAT Movie: கோட் படத்தில் சர்பைரஸ் கதாபாத்திரத்தில் வருகிறாரா த்ரிஷா? முழு விவரம் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2024 10:59 AM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடிகை த்ரிஷை சர்ப்ரைஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் அவர் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் தோன்றுவார் என கூறப்படுகிறது.

லியோ பட சக்சஸ் மீட் நிகழ்வில் விஜய் - த்ரிஷா
லியோ பட சக்சஸ் மீட் நிகழ்வில் விஜய் - த்ரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

அதேபோல் டாப் ஹீரோயின்களாக வலம் வந்த சிநேகா, லைலாவும் படத்தில் நடித்து வருகிறார்கள். புதுமுக நடிகையான மீனாட்சி செளத்ரி கதையின் நாயகியாக நடித்து வருகிறார். ஜெயராம், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி உள்பட வெங்கட பிரபுவின் படத்தில் வழக்கமாக நடிக்கும் நடிகர்கள் பலரும் நடித்து வருகிறார்கள். 

த்ரிஷா சிறப்பு கேமியோ

இதையடுத்து இந்த படத்தில் நடிகை த்ரிஷாவும் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் அவரது கதாபாத்திரம் சில நிமிடங்கள் தோன்றும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது காட்சியில் நடிப்பதற்காக த்ரிஷா இரண்டு நாள்கள் வரை படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளாராம். த்ரிஷா நடித்திருப்பது உண்மையாக இருந்தால், லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இவர்களின் கெமிஸ்ட்ரி தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. 

ஆனால் இது தொடர்பாக படக்குழு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. இதற்கிடைய விஜய் படத்தில் மீண்டும் த்ரிஷா நடித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ என விஜய்யுடன் 5 முறை இணைந்து நடித்திருக்கிறார் த்ரிஷா.

அனுஷ்காவுக்கு பதில் த்ரிஷா

முதலில் த்ரிஷா நடிக்க கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவை படக்குழுவினர் அணுகினார்களாம். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், த்ரிஷா அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

படத்தில் ஏற்கனவே லைலா, சிநேகா, மீனாட்சி செளத்ரி, கனிகா என நாயகிகள் நடித்து வரும் நிலையில் தற்போது மற்றொரு நாயகியாக த்ரிஷாவும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கோட் படம் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ரசிகர்களை கேட்டு வந்த நிலையில், “விரைவில் கோட் அப்டேட்,  மிகவும் வொர்த்தான சம்பவமாக” இருக்கும் என குறிப்பிட்டிருந்தர்.

அவரது டுவிட்டை தொடர்ந்து த்ரிஷா குறித்தான தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இதுதான் வெங்கட் பிரபு கூறிய அப்டேட்டா அல்லது இதையும் மீறி வேறொரு முக்கிய விஷயம் இருக்குமா என்கிற ஆவலும் ஏற்பட்டுள்ளது. 

கனிகா கம்பேக்

திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் கனிகா, தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவரும் இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

கோட் படத்தை பற்றி

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019இல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

1970களில் அமெரிக்காவில் போயிங் விமானம் ஒன்றை கடத்தி, பணத்தை திருடுவிட்டு எஸ்கேப் ஆன அடையாளம் தெரியாத ஹைஜேக்கர் டி.பி. கூப்பர். இவர் பணத்தை கொள்ளையடித்த பிறகு சிக்கி கொள்ளாமல் இருக்க பல்வேறு விஷயங்களை செய்துள்ளார். அந்த வகையில் பார்த்தால் விஜய், டி.பி. கூப்பர் போன்ற கதாபாத்திரத்தில் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் படத்தில் தோன்றுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு கோட் முற்றிலும் புதிய கதையாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

  

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்