Tamil News  /  Entertainment  /  Yuvan Shankar Raja Latest Speech About Thalapathy Vijay Venkat Prabhu Greatest Of All Time Movie

GOAT Vijay: ‘தெளிவா இருக்கேன்.. பேச்சு இல்ல…வீச்சுதான்’ - விஜய் கோட் படம் குறித்து யுவன்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 06, 2024 02:12 PM IST

கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இருவரும் புதிய கீதை திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.

யுவன் ஷங்கர் ராஜா!
யுவன் ஷங்கர் ராஜா!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. அதன் மூலம், நடிகர் விஜய் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியானது.

கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இருவரும் புதிய கீதை திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.

இந்த நிலையில் அவர் இலங்கையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய யுவன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

 

அவர் பேசும் போது, “ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அப்டேட்டை நான் சொல்ல மாட்டேன். இந்த முறை நான் தெளிவாக இருக்கிறேன். பேச்சு இல்ல.... வீச்சுதான். நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய கேமராமேன் சித்தார்த் நுனி கேமராமேனாக பணியாற்றுகிறார்.

முன்னதாக, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஜெமினி மேன் படத்தில் வில் ஸ்மித் மூன்று ரோலில் நடித்திருப்பார். அப்படியானால் விஜய்க்கு இந்த படத்தில் மூன்று ரோல் இருக்கலாம் எனவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள் எனவும் பேச்சு அடிபடுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.