தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Anushka Shetty To Act In Malayalam Film For First Time, Know More Details

Anushka Shetty: மிரட்டலான திகல் கதை! முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அனுஷ்கா - ஹீரோ யார் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 12, 2024 04:58 PM IST

நீண்ட நாள்களாக எந்தவொரு பொது நிகழ்ச்சிகள், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்து வந்தார் நடிகை அனுஷ்கா. முதல் முறையாக அவர் மலையாள படத்தில் நடிக்க இருக்கும் செய்த சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவின் சிங்கம் படங்களில் நடித்த நிலையில், தமிழிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார் அனுஷ்கா. கடைசியாக இவர் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 3 படத்தில் நடித்தார்.

இந்த படத்துக்கு பின்னர் இவர் பாகுபலி, பாகமதி, நிசப்தம் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகினர். இதில் பாகுபலி பேன் இந்திய திரைப்படமாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டைய கிளப்பியது.

முதல் முறையாக மலையாள சினிமாவில் அனுஷ்கா

கடந்த ஆண்டில் அனுஷ்கா நடிப்பில் மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி படம் தெலுங்கில் வெளியானது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றாலும் படம் பெரிய வசூலை குவிக்க வில்லை.

இந்த படத்துக்கு பின்னர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் இருந்து வந்தார்.

தற்போது முதல் முறையாக மலையாள சினிமா ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. திகில் பாணியில் உருவாகும் அந்த படத்துக்கு கத்தனார்- தி வைல்டு சார்சரர் (காட்டு மந்திரவாதி) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அனுஷ்கா இணைந்திருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. படத்தை ராஜின் தாமஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக ஜெய்சூர்யா நடிக்கிறார். வினித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படம் தொடர்பாக இயக்குநர் ராஜின் தாமஸ் தனது இன்ஸ்டாவில், "எங்களது கத்தனார் சினிமா பயணத்தில் அனுஷ்கா ஷெட்டி இணைந்திருப்பதை பெருமையாக கருதுகிறோம்" என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அனுஷ்காவுக்கு பூங்கொத்தும், கடவுளர் கிருஷ்ணரின் சிலையையும் படக்குழுவினர் பரிசாக வழங்கியுள்ளார்கள். தமிழ், தெலுங்கில் மட்டும் முன்னணி நடிகையாக இருந்து வந்த அனுஷ்கா தற்போது மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.

கத்தனார்- தி வைல்டு சார்சரர்

பீரியட் பேண்டஸி கலந்த திகில் படமாக கத்தனார்- தி வைல்டு சார்சரர் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த கடமடத்து காத்தனார் என்கிற கிறஸ்தவ பாதிரியார் பல்வேறு மந்திர சக்திகளை கொண்டவராக இருந்துள்ளார். அவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின திரைக்கதையை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜெய்சூர்யா டைட்டில் கதாபாத்திரத்திலும், அனுஷ்கா முக்கியத்துவம் வாய்ந்த காதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனராம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அத்துடன் படத்தை மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பெங்காலி, கன்னடம் உள்பட மொழிகளிலும் பிற நாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்து படத்தை வெளியிடவுள்ளார்களாம்.

அனுஷ்காவின் இந்த மலையாள திரைப்படம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தலைவி இஸ் பேக் என இந்த படக்குழுவினர்களுடன் அனுஷ்கா இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்