தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Trisha To Play A Dual Role In Telugu Mega Star Chiranjeevi Viswambhara Movie

Trisha: பேண்டஸி த்ரில்லர் படத்தில் இரட்டை வேடம்? அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்கள் - பிஸி நடிகையான த்ரிஷா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 11, 2024 07:58 PM IST

அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் த்ரிஷா தனது சினிமா கேரியரில் இரண்டாவது முறையாக சிரஞ்சீவியின் விஸ்வம்பரா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவுக்கு சிறப்பு பரிசு ஒன்றையும் சிரஞ்சீவி தந்துள்ளார்.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

கதையின் நாயகியாகவும் சில படங்களில் நடித்து முத்திரை பதித்திருக்கும் த்ரிஷா தனது சினிமா கேரியரில் இரண்டாவது முறையார இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் விஸ்வம்பரா என்ற படம் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் கதையின் நாயகியாக கமிட்டாகியிருக்கும் த்ரிஷா, ஹைதராபாத்தில் நடைபெறும் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டபுள் ரோலில் த்ரிஷா

பேண்டஸி த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை மல்லிதி வசிஷ்டா இயக்குகிறார். படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் தோன்றவுள்ளாராம்.

இதற்கு முன்னதாக 2018இல் வெளியான மோகினி என்ற படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஹீரோயினை கதைக்களமாக கொண்ட அந்த படம் அமைந்திருக்கும்.

ஆனால் விஸ்வம்பரா படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் நிலையில், த்ரிஷாவின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஸ்வம்பரா திரைப்படம்

சிரஞ்சீவியின் 156வது படமான விஸ்வம்பரா அடுத்த ஆண்டில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2006இல் வெளியான ஸ்டாலின் படத்துக்கு பின்னர் 16 ஆண்டுகள் கழித்து சிரஞ்சீவியுடன் மீண்டும் இணைந்துள்ளார் த்ரிஷா. ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் சுரபி, இஷா சாவ்லா, மீனாட்சி செளத்ரி உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

எட்டு ஆண்டுகள் கழித்து தெலுங்கு சினிமாவில் த்ரிஷா நடிக்கும் படமாக விஸ்வம்பரா உருவாகிறது. கடந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

த்ரிஷாவுக்கு சிரஞ்சீவி பரிசு

படப்பிடிப்பில் கலந்து கொண்ட த்ரிஷாவுக்கு, மெகா ஸ்டார் சிரஞ்சீவி பரிசு ஒன்றை அளித்துள்ளார். இதைடுத்து இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பின்னர் சிஞ்சீவி அளித்த பரிசு குறித்து வாய் திறந்த த்ரிஷா, வெப்பநிலை கட்டுப்பாடுடன் கூடிய மக் ஒன்றை மெகா ஸ்டார் சிரஞ்சீவி பரிசாக அளித்ததாக தெரிவித்தார்.

டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா

கடந்த ஆண்டில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கதையின் நாயகியாக த்ரிஷா நடித்திருந்தார். படத்தில் விஜய்யின் மனைவியை வரும் அவர், பள்ளி செல்லும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகவும் தோன்றியிருப்பார்.

இதைத்தொடர்ந்து அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப் படத்திலும் நடிக்கிறார்.

இதுதவிர மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் ஐடென்டிட்டி அண்ட் ராம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு த்ரிஷாவுக்கான ஆண்டு என சொல்லும் அளவில் முக்கியமான படங்களில் நடித்து வரும் நிலையில், அவரை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

கடந்த ஆண்டிலும், 2022இல் வெளியான பொன்னியின் செல்வன் சீரிஸ் படங்களில் குந்தவி தேவி இளவரசியாக தோன்றி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். இதனால் அவரது மார்கெட்டும் முன்பை விட உயர்ந்த நிலையில் தனது சம்பளத்தை ரூ. 4 கோடி வரை உயர்த்தியுள்ளார்.

இதுஒருபுறம் இருக்க த்ரிஷாவை சுற்றி பல்வேறு விதமான சர்ச்சைகளும் எழுந்தன. இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த பலரும் த்ரிஷாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்