"நீ வந்து கொதிக்கிறியா.. இரிட்டேட் பண்ணாத" ஓப்பனாக தெரியும் வன்மம்.. ஆள்மாறாட்டத்தால் வெடிக்கும் சண்டை!
பிக்பாஸ் வீட்டில் நடந்துவரும் ஆள்மாறாட்டம் டாஸ்கில் அன்ஷிதாவாக ஜாக்குலினும், ஜாக்குலினாக அன்ஷிதாவும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வன்மத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

"நீ வந்து கொதிக்கிறியா.. இரிட்டேட் பண்ணாத" ஓப்பனாக தெரியும் வன்மம்.. ஆள்மாறாட்டத்தால் வெடிக்கும் சண்டை!
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள வேறு ஒரு நபரைப் போல நடை, உடை, பாவனைகளை மாற்றி செயல்பட வேண்டும் என்ற வீக்லி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
தொந்தரவு செய்யும் ஜாக்குலின்
இந்த டாஸ்கில் அன்ஷிதாவாக மாறிய ஜாக்குலின் சமையல் அறையில் குடிப்பதற்கு பானம் தயாரித்து வருகிறார். அப்போது, ஜாக்குலினாக மாறியுள்ள அன்ஷிதா அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்.
தண்ணி ஊத்துனியா, கொதிச்சதுக்கு அப்புறம் சக்கரை போடு என ஜாக்குலின், அன்ஷிதாவை ஒரு வேளையை செய்ய விடாமல் அடுத்தடுத்து ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.