பிக்பாஸ் வீட்டில் ஆள் மாறாட்டம்.. ரொமான்ஸ் செய்து தள்ளும் ரஞ்சித்.. துடிக்கும் சுனிதா.. வெளிப்படும் வன்மம்
பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவர் மற்றொருவரைப் போல் ஆள் மாறாட்டம் செய்து நடித்துக் காட்ட வேண்டும் என்ற டாஸ்க் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் குஷியாகி சம்பவம் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 3 வாரங்களைக் கடந்துள்ளது. இந்த 3 வாரத்திலும் போட்டியாளர்களின் நடவடிக்கை மக்களுக்கு சரியான பொழுதுபோக்கை அளிக்கவில்லை என்ற பேச்சு தொடர்ந்து எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பும் இல்லாமலே இருக்கிறது.
வச்சு செய்யும் விஜய் சேதுபதி
இதனை விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் மறைமுகமாக எவ்வளவு எடுத்துக் கூறியும், அதனை போட்டியாளர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். போட்டியாளர்கள் விளையாட்டிலும் சரி, பிக்பாஸ் வீட்டிலும் சரி ஏதோ ஆர்வமே இல்லாமல் செயல்படுவது போன்ற எண்ணமே பார்க்கும் அனைவருக்கும் தோன்றி வருகிறது.
இதனால், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், பார்வையாளர்களுக்கு பிக்பாஸ் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறவும் விஜய் சேதுபதி பல முயற்சிகளை செய்தார்.
சம்பவம் செய்த பிக்பாஸ்
இவை எதுவும் வேலைக்கு ஆகாத நிலையில், அவர்களுக்கு பிக்பாஸே போட்டி என்ற பெயரில் ஒரு சம்பவத்தை செய்துள்ளது. அதுதான் ஆள் மாறாட்டம் எனும் போட்டி. இந்தப் போட்டியில், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின், அவர்களின் நடை, உடை, பாவனைகளைப் போல் நடித்துக் காட்டி அவர்களாகவே மாற வேண்டும். இதுதான் அந்தப் போட்டி.
முத்துக் குமரன் கூறிய டாஸ்க்
இந்த ஆள் மாறாட்டம் போட்டி வீக்லி டாஸ்க்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டின் கேப்டன் முத்துக் குமரன் இந்த டாஸ்க் குறித்த அனைத்து தகவல்களையும் மற்ற போட்டியாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
போட்டியாளர்கள் யாராக மாற நினைக்கிறார்களோ, அவர்களைப் பற்றி மக்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்களோ அதனை இந்த விளையாட்டின் மூலம் வெளிப்படுத்தலாம் எனவும் கூறினார்.
ரொமான்ஸ் செய்து தள்ளும் ரஞ்சித்
இதையடுத்து, ரஞ்சித் ஜெஃப்ரியாக வந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் ரொமான்ஸ் செய்து சேட்டை செய்து வருகிறார், இரு வீட்டின் நடுவே இருக்கும் கோட்டின் அருகில் குதித்து குதித்து விளையாடி மாஸ் செய்து வருகிறார்.
அருண், சத்யாவைப் போல மாறியுள்ளார். கை இல்லாத ஜாக்கெட் ஒன்றைப் போட்டுக் கொண்டு, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போல பாவனை செய்து வருகிறார். ஜெப்ஃரி, தீபக் போல உடையணிந்து, கண்ணாடி எல்லாம் போட்டுக் கொண்டு கெத்தாக வலம் வருகிறார்.
சுனிதாவாக மாறி துடிக்கும் சௌந்தர்யா
இதுவரை வீட்டில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த சௌந்தர்யா, சுனிதா மாதிரி பாவனைகளையும், பேச்சுகளையும் வெளிப்படுத்தி அசறவைத்தார். அதுமட்டுமல்லாமல், கில்லர் காய்ன் டாஸ்கில் அவர், முத்துக் குமரனிடம் சிக்கிக் கொண்ட பின் மூச்சு வாங்கி துடித்தார். அதைப் போல் அவர் செய்தது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
அன்ஷிதா, ஜாக்குலினாக மாறி சம்பவம் செய்கிறார். இதனால் பிக்பாஸ் வீடு தாறுமாறாக உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்