தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Three Years Of Enjoy Enjaami Santhosh Narayanan Says The Artists Involved Got Zero Cents As Revenue

Santhosh Narayanan: ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலில் இருந்து கிடைத்த வருமான எவ்வளவு? - சந்தோஷ் நாராயணன் அதிர்ச்சி வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 05, 2024 06:52 PM IST

மூன்று கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப்பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் வெறும் பூஜ்ஜியம். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் இதில் பணியாற்றிய உலகளவில் மிகவும் பிரபலமான கலைஞர்களை எங்கள் தரப்பு தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

சந்தோஷ் நாராயணன்!
சந்தோஷ் நாராயணன்!

ட்ரெண்டிங் செய்திகள்

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்பாடல் சர்ச்சையிலும் சிக்கியது. இந்தப்பாடலில் அறிவுக்கு போதுமான கிரெடிட் கொடுக்கப்படவில்லை என்று அவர் பதிவிட, அதற்கு சந்தோஷ் நாரயணன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப்பாடல் குறித்தான அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை சந்தோஷ் நாராயணன் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், “எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. நான் இப்போது இந்தப்பாடல் மூலம் எவ்வளவு பணம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதை நான் இங்கு சொல்லப்போகிறேன்.

மூன்று கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப்பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் வெறும் பூஜ்ஜியம். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றிய உலகளவில் மிகவும் பிரபலமான கலைஞர்களை எங்கள் தரப்பு தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

ஆனால் எங்களுக்கு இது வரை எந்த வித வருமானமும் அந்தப்பாடலில் இருந்து கிடைக்க வில்லை. இந்த அனுபவத்தால் நான் இப்போது என்னுடைய சொந்த ஸ்டியோவை தொடங்கி இருக்கிறேன். இதில் இன்னொரு போனஸ் என்னவென்றால் என்னுடைய யூடியூப் சேனலுக்கு திருடப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து வரும் வருமானம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே சென்று கொண்டு இருக்கிறது.” என்று பேசி இருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்