Wheat Pizza: பீட்சாக்கள் பலவகை ஒவ்வொரு ஒரு வகை! வீட்டிலேயே சுவை மிக்க கோதுமை பீட்சா செய்வது எப்படி?
கடைகளில் நாம் வாங்கும் பீட்சா ருசிக்கு இணையாக வீட்டிலேயே சில வகையான பீட்சா வகைகளை தயார் செய்யலாம். அந்த வகையில் கோதுமையை வைத்து பீட்சா செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
கோதுமை வைத்து சப்பாத்தி, போளி, பிஸ்கட் என பல்வேறு பலகாரங்கள் செய்யலாம். கோதுமை பிரட் கூட செய்து அதை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது இயல்புதான். சிறியவர், பெரியவர் என அனைவருக்கும் பிடித்தமான அ்யல்நாட்டு உணவாக இருந்து வரும் பீட்சாவை கோதுமை வைத்து சுவையாகவும், மிருதுவாகவும் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
கோதுமை பீட்சா செய்ய தேவையான தேவையான பொருள்கள்
கோதுமை மாவு - 1 கப்
ஈஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டிஸ்பூன்
தண்ணீர் - மாவு பிசைவதற்கு ஏற்ப
பீட்சா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
டாப்பிங்ஸ் - பன்னீர்/சிக்கன், கொடைமிளகாய், கேரட், முள்ளங்கி
செய்முறை
கோதுமை, தண்ணீர், சர்க்கரை, ஈஸ்ட், பீட்சா சாஸ் சேர்த்து பீட்சா போன்று பிசைந்துகொள்ளவும். இதிலும் விருப்பத்துக்கு ஏற்ப ஆரோக்கியமான டாப்பிங்ஸ், மேற்பரப்பில் குறைவான சீஸ் ஆகியவற்றை சேர்த்து பென்னிறமாகும் வரை பேக் செய்யவும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய மற்ற பீட்சா வகைகள்
எலும்புகள் இல்லாத கோழியின் மார்பு பகுதியை அடிப்பகுதியாக வைத்து பீட்சா தயார் செய்யலாம். கார்ப்போஹைட்ரேட் பீட்சா சாப்பிட விரும்புகிறவர்களுக்கு இது நல்ல மாற்று. அதேபோல் கோதுமை ரொட்டியை அடிப்பகுதியில் வைத்தும் தயார் செய்யலாம்.
ஆரோக்கியமான முறையில் எதையெல்லாம் பயண்படுத்தி பீட்சா செய்யலாம்
ஓட்ஸ் அல்லது தினை அல்லது பல தானியங்கள் கலந்த மாவு போன்றவற்றை சேர்த்து தயார் செய்யலாம்
காலிபிளவர், மாவுச்சத்து அல்லது நார்ச்சத்து மற்றும் வேர்கள் நிறைந்த காய்கறிகளை வைத்து தயார் செய்ய சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கூடுதல் நார்ச்சத்து பெறலாம்
வழக்கமான பொருள்களாக இல்லாமல் சிக்கன், முட்டைக்கோஸ், கீரை இலைகளை அடிப்பகுதியாக பயன்படுத்தினால் முற்றிலும் மாறுபட்ட சுவையை பெறலாம்
பீட்சாவில் சேர்க்கப்படும் சீஸ் அளவை எவ்வளவு குறைக்கிறோமோ உடலில் கொழுப்பு சேர்வதும் குறைக்கப்படும்
அதேபகுதில் உள்ளூர் பகுதியில் கிடைக்கும் காய்கறிகள், பருவநிலைக்கு ஏற்ப காய்கறிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்வதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துகளை பெறுவதோடு, நார்ச்சத்தும் கிடைக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்