தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jigarthanda 2: ‘தந்தம் முன்னாடி தீ’ - மிரள விட்ட கார்த்திக் சுப்புராஜ் - ஜிகிர்தண்டா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Jigarthanda 2: ‘தந்தம் முன்னாடி தீ’ - மிரள விட்ட கார்த்திக் சுப்புராஜ் - ஜிகிர்தண்டா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalyani Pandiyan S HT Tamil
May 15, 2023 04:53 PM IST

ஜிகிர்தண்டா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Jigarthanda 2
Jigarthanda 2

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப்படத்தை தயாரித்து இருந்தார். இதில் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இதனையடுத்து ஜிகிர்தண்டா படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், அன்றைய தினம் ஜிகிர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனே இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது, மிரட்டலாக வெளியான இந்த டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் இந்தப்படத்தின் அப்டேட்டானது இன்றைய தினம் 4 மணிக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். 4 மணி தாண்டியும் எந்த அப்டேட்டும் வெளியாக நிலையில், தற்போது அந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்தியின் ஜப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளி பந்தையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்