Vignesh Sivan: ‘பல கோடி செலவு பண்ணிதான்.. ..காரி துப்பாத ஆளே கிடையாது’- விக்னேஷ் சிவன்!
Vignesh Sivan: ஆனால், யார் என்ன சொன்னாலும் அந்த படம் குறித்தான என்னுடைய பார்வை என்பது எப்போதும் அப்படியேதான் இருந்தது. - விக்னேஷ் சிவன்!

பிரபல இயக்குநரும், நயன் தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய படங்களில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
காரி துப்பாத ஆட்களே கிடையாது
இது குறித்து அவர் பேசும் போது, "நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட, அந்த படத்தை பார்த்த திரை உலகினர், நெகட்டிவான விமர்சனங்களையே தந்தார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால், அந்த படத்தை காரி துப்பாத ஆட்களே கிடையாது என்று சொல்லலாம். இறுதியாக மக்கள்தான் அந்த படத்தை காப்பாற்றினார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் அந்த படம் குறித்தான என்னுடைய பார்வை என்பது எப்போதும் அப்படியேதான் இருந்தது.
நீங்கள் படம் குறித்து என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால், என் மனதிற்கு எதுவும் சரி என்று பட்டதோ, அதை நான் செய்து விட்டேன் என்ற நிலையில்தான் நான் இருப்பேன். இவ்வளவு ஏன் நான் கடைசியாக இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு கூட இப்படியான விமர்சனங்கள்தான் என்னை நோக்கி வந்தன. படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர் கூட, இந்த படம் ஒர்க் அவுட் ஆகும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. இந்த மாதிரியான படங்களை எடை போடுவது என்பது மிக மிக கடினம்.