விஜய்ய நம்பி ஒன்னும் இல்ல.. இங்க தேவையே வேற.. ஆசையாக பேசி ஆப்பு வைத்த திருப்பூர் சுப்ரமணியம்
தமிழ் சினிமா நடிகர் விஜய் எனும் ஒருவரை மட்டும் நம்பி இயங்கவில்லை என திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு செல்ல உள்ளதாக கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம், நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகினால், அது சினிமாவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுகின்றனர்.
சினிமாவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை
ஆனால், தமிழ் சினிமாவிற்கு அப்படி எல்லாம் ஒன்றும் பாதிப்பு வராது. தமிழ் சினிமாவைக் காப்பாற்ற எம்ஜிஆர், சிவாஜிக்குப் பின் ரஜினி, கமல் வந்தனர். அவர்களுக்குப் பின் விஜய், அஜித் வந்தனர். இப்போது, இவர்களுக்குப் பின் வேறு யாராவது வருவார்கள்.
விஜய் படங்களை விட இது தான் ஹிட்
அதுமட்டுமல்லாமல், இப்போது விஜய் படங்களைக் காட்டிலும் பான் இந்தியா திரைப்படம் அதிக வசூலைப் பெறுகிறது. ஒரு படம் மொழி கடந்து ரசிகர்களை ஈர்ப்பதால், சினிமா தொழிலும், தியேட்டர் தொழிலும் எந்த வகையிலும் பாதிக்காது.
