TAMIL DIRECT OTT RELEASE: சினிமாவை மீட்டெடுத்த ஓடிடி தளங்கள்..தமிழில் நேரடி ஓடிடி ரிலீஸ்! கெத்து காட்டிய படங்கள் லிஸ்ட்-these are the tamil films released directly in ott and become huge hit - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Direct Ott Release: சினிமாவை மீட்டெடுத்த ஓடிடி தளங்கள்..தமிழில் நேரடி ஓடிடி ரிலீஸ்! கெத்து காட்டிய படங்கள் லிஸ்ட்

TAMIL DIRECT OTT RELEASE: சினிமாவை மீட்டெடுத்த ஓடிடி தளங்கள்..தமிழில் நேரடி ஓடிடி ரிலீஸ்! கெத்து காட்டிய படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 24, 2024 08:54 AM IST

Tamil Direct Ott Release: கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமாவை மீட்டெடுத்த வரப்பிரசாதமாக ஓடிடி தளங்கள் இருந்தன. தமிழில் நேரடி ஓடிடி ரிலீஸ் ஆக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கெத்து காட்டிய படங்கள் எவை என்பதை பார்க்கலாம்.

Tamil Direct Ott Release Movies: சினிமாவை மீட்டெடுத்த ஓடிடி தளங்கள்..தமிழில் நேரடி ஓடிடி ரிலீஸ்! கெத்து காட்டிய படங்கள் லிஸ்ட்
Tamil Direct Ott Release Movies: சினிமாவை மீட்டெடுத்த ஓடிடி தளங்கள்..தமிழில் நேரடி ஓடிடி ரிலீஸ்! கெத்து காட்டிய படங்கள் லிஸ்ட்

அந்த காலகட்டத்தில் சில படங்கள் நேரடியாகவே ஓடிடியில் வெளியிடப்பட்டதோடு நல்ல வரவேற்பையும் பெற்றன. இப்பவும் கூட சிறு பட்ஜெட் படங்கள், ரிலீஸ் பிரச்னை சிக்கலில் மாட்டிக்கொள்ளும் படங்களும், நல்ல விலைக்கு போகும் படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியாகின்றன.

பிரபல ஓடிடி தளங்களில் முன்னணி ஹீரோக்களின் சில படங்களும் நேரடியாக ரிலீஸாகி வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஓடிடியில் நேரடி ரலீசாகி கெத்து காட்டிய தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

சூரரை போற்று

கொரோனா முதல் அலையின் போது, திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களும் தனிப்பட்ட இடைவெளியை கடைப்பிடித்த வந்த அநத் காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியானது சூரரை போற்று படம். சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், பூ ராமு உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.

அமேசான் ப்ரைம் விடியோவில் இந்த படம் நேரடியாக வெளியாக அமோக வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகராக இருந்து சூர்யாவின் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் நேரடியாக வெளியாகியது. சொல்லப்போனல் ஓடிடி ரிலீஸுக்கு பிள்ளையார் சுழி போட்ட படமாகவே சூரரை போற்று இருந்தது என கூறலாம்.

மூக்குத்தி அம்மன்

சூர்யாவின் சூரரை போற்று படத்துடன் இணைந்து வெளியானது மூக்குத்தி அம்மன் திரைப்படம். ஆர்.ஜே. பாலாஜி இயக்குநராக அறிமுகமான இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், ஆர்.ஜே. பாலாஜி, மெளலி உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த படம் டிஸ்ன் ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது

ஜகமே தந்திரம்

தனுஷின் நேரடி ஓடிடி ரிலீஸாக ஜகமே தந்திரம் படம் அமைந்திருந்தது. 2020 மே மாதம் ரீலிஸ் ஆவதாக இருந்த இந்த படம் கொரோனா முதல் அலை காரணமாக தள்ளிப்போனது.

இதன் பிறகு 2021இல் கொரோனா இரண்டாம் அலை காலகட்டத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி, ஜோஜு ஜார்ஜ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

மதுரை பரோட்டா கடை நடத்தி வரும் தனுஷ் லண்டன் சென்று அங்கு இலங்கை தமிழர்களுக்கு உதவுவது போல் படத்தின் கதை அமைந்திருக்கும். கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

சார்பட்டா பரம்பரை

சூரரை போற்று போல் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. பா. ரஞ்சித் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்த ட்ரெண்டிங் மெட்டீரியல் ஆனது. இந்த படத்தின் காட்சிகளுடன் கூடிய ரீல்ஸ்களை உருவாக்கி ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன் உள்பட பலரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்த படமும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஜெய் பீம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் விதமாக சூர்யா நடிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான படம் ஜெய்பீம். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஞானவேல்ராஜா இயக்கியிருந்தார். மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜின்ஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக மொழிகளை கடந்து வரவேற்பை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.