Suriya: படப்பிடிப்பில் சூர்யாவிற்கு தலையில் காயம்.. பதறிய ரசிகர்கள்.. முன்வந்து உண்மையை சொன்ன சூர்யா நண்பர்!-suriya suffers injury on karthik subbaraj suriya 44 sets producer rajsekhar says he is safe now - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suriya: படப்பிடிப்பில் சூர்யாவிற்கு தலையில் காயம்.. பதறிய ரசிகர்கள்.. முன்வந்து உண்மையை சொன்ன சூர்யா நண்பர்!

Suriya: படப்பிடிப்பில் சூர்யாவிற்கு தலையில் காயம்.. பதறிய ரசிகர்கள்.. முன்வந்து உண்மையை சொன்ன சூர்யா நண்பர்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 09, 2024 05:32 PM IST

Suriya: சூர்யாவிற்கு ஏற்பட்டு இருக்கும் காயம் குறித்து சூர்யாவின் நண்பர் ராஜசேகரபாண்டியன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Suriya: படப்பிடிப்பில் சூர்யாவிற்கு தலையில் காயம்.. பதறிய ரசிகர்கள்.. முன்வந்து உண்மையை சொன்ன சூர்யா நண்பர்!
Suriya: படப்பிடிப்பில் சூர்யாவிற்கு தலையில் காயம்.. பதறிய ரசிகர்கள்.. முன்வந்து உண்மையை சொன்ன சூர்யா நண்பர்!

சூர்யா எப்படி இருக்கிறார்? 

 

அந்த விளக்கத்தில், “ அன்பான ரசிகர்களே.. இது மிக மிக சிறிய காயம். ஆகையால் கவலைகொள்ள வேண்டாம். உங்கள் அன்பினாலும், ஆசீர்வாதத்தாலும் சூர்யா அண்ணா நலமாக இருக்கிறார்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

திரைத்துறையில் தற்போது அதிகமான அளவில் தகவல் கசிவு நடந்து வருகிறது.

முன்னதாக, சூர்யாவின் 44 படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கருணாகரன், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

சூர்யா 44 படம் குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசும் போது, “ இந்தக்கூட்டணி குறித்தான ரகசியத்தை பாதுகாப்பது என்பது மிக மிக முக்கியமானது. திரைத்துறையில் தற்போது அதிகமான அளவில் தகவல் கசிவு நடந்து வருகிறது. அதனால் சரியான தருணம் வரும் வரை இந்த கூட்டணி தொடர்பான ரகசியத்தை நாங்கள் பாதுகாத்து வந்தோம்.

இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டணி அவர்களின் கலை குறித்தான பார்வையை உயிர்பிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது.” என்று பேசினார்.

எப்போதும் அழகாக இருக்கும் சூர்யாவுடன்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை இயக்க இருப்பது பற்றி முன்னதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில், “ நான் என்னுடைய அடுத்தப்படத்தில், எப்போதும் அழகாக இருக்கும் சூர்யாவுடன் சாருடன் இணைய இருக்கிறேன்” பதிவிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. காரணம், சூரரைப்போற்று திரைப்பட வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா படத்தில் கமிட் ஆன நடிகர் சூர்யா, அந்தப்படம் கால தாமதம் ஆகும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காரணம், விடுதலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விடுதலை இரண்டாம் பாகத்தை முடித்த பின்னர், வாடிவாசல் படத்தை இயக்க இருப்பதாக வெற்றிமாறன் கூறி இருந்தார். இதற்கிடையே சூர்யா 44 தொடர்பான அறிவிப்பு வந்த காரணத்தால், அந்தப்படத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

கங்குவா நிலைமை

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.வில்லனாக அண்மையில் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.