Theatre Owners: கட்டணத்தை உயர்த்தணும்.. 24 மணி நேரமும் தியேட்டர் ஓடணும்: சங்கம் மூலம் கோரிக்கை வைத்த தியேட்டர் ஓனர்கள்-the theater owners demand that the theater fees should be increased and the theater should run 24 hours a day - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Theatre Owners: கட்டணத்தை உயர்த்தணும்.. 24 மணி நேரமும் தியேட்டர் ஓடணும்: சங்கம் மூலம் கோரிக்கை வைத்த தியேட்டர் ஓனர்கள்

Theatre Owners: கட்டணத்தை உயர்த்தணும்.. 24 மணி நேரமும் தியேட்டர் ஓடணும்: சங்கம் மூலம் கோரிக்கை வைத்த தியேட்டர் ஓனர்கள்

Marimuthu M HT Tamil
Sep 24, 2024 04:21 PM IST

Theatre Owners: கட்டணத்தை உயர்த்தணும் எனவும், 24 மணி நேரமும் தியேட்டர் ஓடணும் எனவும் சங்கம் மூலம் கோரிக்கை வைத்த தியேட்டர் ஓனர்கள் குறித்துப் பேசியுள்ளார்.

Theatre Owners: கட்டணத்தை உயர்த்தணும்.. 24 மணி நேரமும் தியேட்டர் ஓடணும்: சங்கம் மூலம் கோரிக்கை வைத்த தியேட்டர் ஓனர்கள்
Theatre Owners: கட்டணத்தை உயர்த்தணும்.. 24 மணி நேரமும் தியேட்டர் ஓடணும்: சங்கம் மூலம் கோரிக்கை வைத்த தியேட்டர் ஓனர்கள்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவசரக் கூட்டமானது, இன்று (செப்.24) காலை 11 மணியளவில், சென்னை தேனாம்பேட்டையில் டாக்டர் மல்லிகை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் கவனம்பெறும் வகையில் பல்வேறு தீர்மானங்களைப் போட்டுள்ளனர்.

அதன்பின், ஊடகவியலாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர் செல்வம், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதை அவர் பத்திரிகையாளர்கள் முன் அவர் பேசுகையில்,''தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை OTT-யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும் என தீர்மானங்களை வாசித்தனர்.

பெரிய நடிகர்களின் படங்களை 8 வாரங்கள் கழித்து திரையிட வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

அதில் பெரிய நடிகர்களின் படங்களை 8 வாரங்கள் கழித்தும். அதுக்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படங்களை 6 வாரங்கள் கழித்தும் OTT-யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும்.

சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் புதிய படத்தின் வசூல் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது’’ எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் அரசின் கவனத்திற்கு சில கோரிக்கைகளை வைத்தார்.

அதில், ‘’திரையரங்குகளில் பராமரிப்புக் கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% கூட்டி வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு: ரூ.250 வரையும்; A/C திரையரங்குகளுக்கு: ரூ.200 வரையும்; NON A/C திரையரங்குகளுக்கு: ரூ.150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

நம் பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.

Operator License-க்கு தாங்கள் புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள். அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை. ஆகவே, அதை மாற்றி நாங்கள் கேட்டது போல், Operator License தேவையில்லை அல்லது எளிய முறையில் Operator License தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

MALL-களில் உள்ள திரையரங்குகளில் Commercial Activity-க்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் Commercial Activity-க்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திரையரங்குகள் MSMEஇன் கீழ் வருவதால் MSME விதிகளின்படி எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள் நஷ்டமின்றி நடத்த முடியும்.

நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் மற்றும் சில திரையரங்க உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாட்டில் திரையரங்குகளுக்கு உள்ளாட்சி வரி 8 விழுக்காடு விதிக்கப்படுவதை நீக்கக்கோரியும், திரையரங்குகளுக்கு அரசு அளிக்கும் மானியத்தை அதிகரிக்கக்கோரியும் திரையரங்கு உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல் விநியோகஸ்தர்கள் தமிழ்நாட்டில் 80% பங்குத்தொகை கேட்பதை நிறுத்தக்கோரியும், அதைக் குறைக்கக்கோரியும் கடந்த காலங்களில் திரைப்பட உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.