OTT Weekend Movies: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தங்கலான் ரிலீஸ் எப்போது? இந்த வார ஓடிடி தமிழ் ரிலீஸ் லிஸ்ட்
OTT Weekend Movies: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சீயான் விக்ரம் நடித்த தங்கலான் ஓடிடி ரிலீஸ் எப்போது? இது தவிர அமேசான் ப்ரைம் ஓடிடியில் புதிய வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த வார ஓடிடி தமிழ் ரிலீஸ் லிஸ்டை பார்க்கலாம்
இந்த வாரம் பிரபல ஓடிடி தளங்களில் புதிய படங்களும், வெப்சீரிஸ்களும் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த வார வீக்கெண்டில் பிரபல ஓடிடி தளங்களில் பார்க்க வேண்டிய தமிழ் படங்கள், வெப்சீரிஸ்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
தங்கலான்
கடந்த மாதம் 15ஆம் தேதி மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தங்கலான். விக்ரம், மாளவிகா மேனன், பார்வதி, பசுபதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்ற தங்கலான், தற்போது இந்தியில் வெளியாகி அங்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோலார் தங்க வயலின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 20இல் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனாலும் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.
அதேபோல் படம் டென்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகும் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. இந்த சூழ்நிலையில் தங்கலான் படம் வரும் வாரத்தில் எப்போது வேண்டுமானலும் நெட்பிளிக்ஸ் அல்லது டென்ட்கொட்டாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1850 காலகட்டத்தில் நடக்கும் தங்கலான் கதையில், அந்த காலகட்டத்தில் பேசப்பட்ட மொழி சரியாக புரியவில்லை, கமர்ஷியல் அம்சங்கள் பெரிதாக இல்லை என விமர்சிக்கப்பட்டாலும் பாக்ஸ் ஆபிஸில் படம் நல்ல வசூலை பெற்றது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் தற்போது வரை ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் படம் சமீபத்தில் வெளியாகி, அங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
தலைவெட்டியான்பாளையம்
பஞ்சாயத் என்ற இந்த வெப்சீரிஸின் தமிழ் ரீமேக்காக தலைவெட்டியான்பாளையம் உருவாகியுள்ளது. அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி சேத்தன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த காமெடி தொடர் சராசரியாக 30 நிமிடங்களை கொண்டதாக உள்ளது.
பேச்சி
அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் பி இயக்கத்தில் காயத்ரி, பால சரவணன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் பேச்சி. திகில் படமாக உருவாகியிருக்கும் பேச்சி விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற படமாக உள்ளது. அமேசான் ப்ரைம், ஆஹா என இரண்டு ஓடிடி தளங்களில் இந்த படம் உள்ளது.
மூன்றாம் மனிதன்
ராம்தேவ் இயக்கிய இந்த படம் பள்ளி சிறுவர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கான காரணங்களையும் அவர்கள் மாற்றத்துக்கான பயணத்தையும் ஆராயும் விதமாக கதைக்களம் அமைந்துள்ளது. படத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், ராம்தேவ், மதுரை ஞானம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் விடியோவில் இந்த படம் வெளியாகியாகியுள்ளது.
காபி
ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, தன் இளைய சகோதரனைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கிறாள். அவர்களின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றும்போது, எதிர்பாராத சவால்கள் எழுகின்றன.
இனியா, முக்தா கோட்ஸ், ராகுல் தேவ், ராமசந்திரன் துரைராஜ், செளந்தரராஜன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம் சாய் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 2022ஆம் ஆண்டில் வெளியான இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வாரத்தில் இருந்து ஸ்டிரீமிங் ஆகிறது.
ஆற்றல்
விதார்த், ஷரிதா ராவ், வம்சி கிருஷ்ணா நடித்திருக்கும் இந்த படத்தை கே.எல். கண்ணன் இயக்கியுள்ளார். திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் ஆற்றல் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த படங்கள் தவிர கடந்த வாரம் வெளியான கிரீத்தி சுரேஷ் நடித்த ரகுதாத்தா ஐீ5 ஓடிடியிலும், பார்த்திபன் இயக்கி நடித்த டீன்ஸ் அமேசான் ப்ரைம் விடியோவிலும், புதுமுகங்கள் நடித்த நண்பன் ஒருவன் வந்த பிறகு ஆஹா ஓடிடி தளத்தில், விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா ரைசிங் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது. இந்த படங்களை பார்க்காமல் மிஸ் செய்திருந்தாலும் பார்த்து ரசிக்கலாம்.
டாபிக்ஸ்