தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mohan G:பகாசூரன் பிற்போக்கு படமா? யாரு சொன்னா;இந்தாங்க ஆதாரம்.. மோகன் ஜி அதிரடி!

Mohan G:பகாசூரன் பிற்போக்கு படமா? யாரு சொன்னா;இந்தாங்க ஆதாரம்.. மோகன் ஜி அதிரடி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 17, 2023 11:47 AM IST

பகாசூரன் திரைப்படம் பிற்போக்கு சிந்தனை கொண்ட படம் அல்ல என்று கூறி அந்த படத்தின் இயக்குநர் மோகன் ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பகாசூரன் மோகன் ஜி
பகாசூரன் மோகன் ஜி

ட்ரெண்டிங் செய்திகள்

மோகன் ஜி
மோகன் ஜி

அதனைத்தொடர்ந்து இவர் இயக்கிய ருத்ரதாண்டவம் படமும் விவாதத்தை எழுப்பியது. படங்கள் மட்டுமல்ல இவர் ஜாதி குறித்து பேசும் பேட்டிகளும் சமூக வலைதளங்களின் வைரல் ரகம். இதனால் மோகன் ஜிக்கு ஜாதி வெறியன் என்ற முத்திரையையும் சிலர் குத்தினர்.

இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படமானது மொபைல் போனால் இளைஞர்கள் எவ்வாறு பாலியல் தொழிலுக்குள் நுழைக்கப்படுகிறார்கள் என்பதை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

அதில் பல காட்சிகள் உண்மையை தத்ரூபமாக காண்பித்தாலும், மோகன் ஜி பெண்களை மிகவும் பிற்போக்குத்தனமாக காண்பித்துள்ளதாக கூறி சர்ச்சைகள் கிளம்பின. தொடர்ந்து இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் மோகன் ஜியை பெயர் குறிப்பிடாமல், அவர் பின்னால் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என்று சொல்ல, அதற்கு பதிலளித்த மோகன் ஜி தான் அப்படியில்லை என்றும் அமீர் சொன்னதை 3 நாட்களுக்குள் வாபஸ் வாங்க வேண்டும் என்று பேட்டியளித்தார்.

இந்த நிலையில் மோகன் ஜி தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார். அதில் பகாசூரன் படத்தில் வருபவது போலவே ஒரு காதல் ஜோடி விபாசார தொழிலில் சிக்கும் செய்தி தொகுப்பு இருந்தது. மேலும் அதில் பதிவிட்ட மோகன் ஜி, “ இரண்டு நிமிடம் செலவு செய்து இந்த வீடியோ முழுவதும் பாருங்கள்... பகாசூரன் திரைப்படத்தின் கதை புனைவு அல்ல, பிற்போக்கு அல்ல.. உண்மை சம்பவம்..பெற்றோர்களே தயவு செய்து கவனமாக இருங்கள்.. கழுகு கூட்டம் சுற்றிலும் உள்ளது.. விழித்து கவனமாக இருங்கள்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்