தைய தைய பாடல் கொடுத்த பிரபலம்.. ஓம் சாந்தி ஓம் காதல்.. ரா ஒன்னில் தமிழன்.. அட்லீக்கு தந்த ஊக்கம்.. ஷாருக்கானின் கதை
தைய தைய பாடல் கொடுத்த பிரபலம்.. ஓம் சாந்தி ஓம் காதல்.. ரா ஒன்னில் தமிழன்.. அட்லீக்கு தந்த ஊக்கம்.. ஷாருக்கானின் கதையினை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

90-களில் பிறந்த பல குழந்தைகளுக்கு, உயிரே படத்தில் வரும் ’தைய தைய தையா பாடல்’, தங்கள் சிறுவயதில் மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம், குழந்தைபோல் ஒருவர் ரயிலில் நடனம்புரிவது தான். அப்படி தான் ஷாருக்கான் பலருக்கும் பிடித்த நடிகராக தமிழ்நாட்டில் மாறத் தொடங்கினார். தமிழில் கமல்ஹாசனின் ஹேராம் படத்திலும், தமிழ்ப் பெண்ணைக் காதலிக்கும் நபராக சென்னை எக்ஸிரஸ் படத்திலும், ரா ஒன் படத்தில் படத்தில் சேகர் சுப்பிரமணியன் என்னும் தமிழ்க் கதாபாத்திரத்திலும் ஷாருக்கான் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் தமிழ் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.1000 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனைப் புரிந்தது.
பாலிவுட் பாட்ஷா எனப் புகழப்படும் ஷாருக்கான் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ முதல் பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் லெஜியன் ஆஃப் ஹானர் விருது வரை பல முக்கிய விருதுகளைத் தன் நடிப்புத்திறமையின் மூலம் பெற்றவர்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தற்போது இந்திய சினிமாவின் கவுரவமாக மாறி உயர்ந்து நிற்கும் ஷாருக்கானின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வாருங்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்வோம்.